Headlines

கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டுள்ள 495 ரூபாவிற்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோழி பண்ணை உரிமையாளர்களின் வரி நீக்கப்பட்டு, அவர்களுக்கான சலுகைகள் செய்து தரப்படுமாயின் குறித்த…

Read More

நாட்டில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கவில்லை

-எம்.ஆர்.எம்.வஸீம் – நாடு செல்லும் வீழ்ச்சிப்பாதையை தடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறாமல் நாட்டுக்கு பொருத்தமற்ற மாற்றங்களே இடம்பெறுகின்றன. என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த தேரர் தெரிவித்தார். தாய்நாடு எங்கள் அமைப்பு கொழும்பில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 30 வருட யுத்தத்தில் நாங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டோம். தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டை அபிவிருத்தி…

Read More

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளணத்தின் தொழில் பயிற்சி கண்காட்சி

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளனம் நடாத்தி வரும்  தும்பர தொழில்பயிற்சி நிலையத்தில், தையல் பயிற்சி பெற்றுவரும்  யுவதிகளும், மின்னியல் துறையில் பயிற்சி பெற்றுவரும் இளைஞர்களும், தாருல் ரஹ்மான் அமைப்பைச் சேர்ந்த மாணவிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் நேற்று (15/07/2016) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்நிகழ்வு திகன இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

லஹிருவிற்கு பிணை!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டள்ளது. 7,900 ரூபாய் காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்க, கோட்டை நீதவான் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றக் கட்டளையையும் மீறி, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையானது எதிர்மாவரும் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

மாத்தளையில் டெங்கு அதிகரிப்பு!

மாத்தளைப் பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோர் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகின்றது. மேற்படி டெங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான மாத்தளை பொது வைத்தியசாலை வார்ட் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாகவுள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு முறையான படுக்கை வசதியின்றி பாய் விரித்து தரையிலே படுக்க வைத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து நாளாந்தம் மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டொரு மாதங்களாகவே விட்டுவிட்டு பெய்யும்…

Read More

12 மீனவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை

-ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

முஸ்ஸமிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டு சாப்பாடு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் இரவு சாப்பாடு சிறைச்சாலையிலேயே வழங்கப்பட்டது. 70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல்…

Read More

நாட்டை வந்தடைந்தார் மலினோஸ்கி

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலினோஸ்கி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக, சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார்.

Read More

நாலன்தா கல்லூரியின் அதிபர் சற்றுமுன்னர் விடுதலை

பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு நாலன்தா கல்லூரியின் அதிபர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாலன்தா கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்ட அதிபரான ரஞ்சித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. vk

Read More

சிறைக்காவல் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது

நான்கு சிறைச்சாலை காவல் அதிகாரிகளை தஹாய்யகம பிரதேசத்தில் வைத்து தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை  அனுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளை இளைஞர்கள் முடி வெட்டும் நிலையமொன்றில் வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 21 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாக்கப்பட்ட சிறைச்சாலை காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இத்தாலி, சீனப்பிரஜைகள் மீது குளவித்தாக்குதல்

சீகிரியாவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது குளவி கொட்டியதில், பாதிக்கப்பட்டவர்கள் கிஓஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், சீனப்பிரஜைகள் 7பேர், இத்தாலிப்பிரஜைகள் இருவர் மற்றும் பிபிலையைச்சேர்ந்த 16பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுச் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More