Headlines

ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மட்டுமே செயலமர்வில் உள்ளடக்கப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறு…

Read More

லஹிரு வீரசேகரவிற்கு விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

பேலியகொடையில் ஆர்ப்பாட்டம்

களனி – பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன் – அமீர் அலி பெருநாள் வாழ்த்து செய்தி

மலரும் புனித நோன்புப் பெருநாளில் சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். சகலரும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வை இந்த புனித தினத்தில் அடைய வேண்டுமென்பதே எனது பேரவா ஆகும். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்… பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்ட எமது இலங்கைத்திரு நாட்டில், சகல இன மக்களும் இன பேதங்களைக்கடந்த, ஒற்றுமையுடனும்,பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும்,…

Read More

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.  இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’…

Read More

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், இன்று (03) ஞாயிற்றுக்கிழமை, தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரதான சந்தேகநபர்…

Read More

பேராதனை பல்கலைகழக ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தப் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (3) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த கண்டி மாநகர சபையின் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர். தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

Read More

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு 7, 8 ஆம் திக­தி­களில் விடு­முறை

நோன்புப் பெரு­நா­ளை­யொட்டி, நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பிரிவின் பணிப்­பாளர் இஸட்.தாஜூடீன் தெரி­வித்தார். குறித்த இரு விடு­முறை தினங்­க­ளுக்­கு­மான பதில் பாட­சாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் நடாத்­தப்­பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்­டுள்­ளது. இது ­கு­றித்து, கல்­வி­ய­மைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­தா­கவும் பணிப்­பாளர் தாஜூடீன் மேலும் தெரி­வித்தார்….

Read More

டெங்கு பரவும் இடங்களின் உரிமையாளர்கள் 139 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மூன்று நாள் கொண்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளான நேற்று (30) நாட்டில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 18,000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

Read More

கடும் காற்று! மக்கள் அவதானம்

மலையகத்தின் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது. இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள அதேவேளை, தொடர்ந்தும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 6 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை

சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து போன்ற நாடுகளில் சீனிக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மென்பாணங்களில்…

Read More