Headlines

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை புதிய கோணத்தில் பொலிஸார் விசாரணை

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்தவர்தத்கர்கள் இருவரிடமும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் 400இலட்சம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் (25) பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும்,…

Read More

பேராதனை மோதல் சம்பவம் மூன்று குழுக்கள் விசாரணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மோதல் சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேராதனை பல்கலைக்fழக இணைந்த சுகாதார கல்விப் பீட சிரேஷ்ட மாணவர்கள் சிலருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்குமிடையே  இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 12 க்கும் மேற்பட்ட மொழிபேசும் மாணவர்கள் காயமடைந்த போதும் 5 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்….

Read More

விபத்தில் 20 பேர் படுகாயம்

குருநாகலிலிருந்து பத்தரமுல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும், குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் துல்ஹிரியவில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். இன்று  காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தோர், வறகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!

நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேற்பார்வையாளர்களாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிபர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும், அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை…

Read More

வருட இறுதிக்குள் 1,210 பாலங்கள்

இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் 1, 210 பாலங்கள் அமைக்கப்படும் என மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த கிராம பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும். இதற்காக 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

நாடு கடத்தப்பட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜர்!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 6பேர் இலங்கைக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். அதற்கமைய இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த வேளைகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள் கடந்த மாதம் 21ம் திகதிகாத்தான்குடி கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில்தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசின் கோரிக்கமைய இவர்கள்அவுஸ்திரேலிய படகுகள் மூலம் காப்பற்றப்பட்டு மீண்டும்…

Read More

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அநுராதபுரம் மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக்  ரஹுமான் அவர்களின் முயற்சியின் பயனாக எமது மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் ஆலோசனையின்  அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன் நிகழ்வின்போது கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்  முஸ்லீம் பாடசாலை ஒன்றிற்கு அதிகளவான  நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்…

Read More

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால்  தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

2020 இல் புதிய அரசாங்கம் அமைக்க திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே  2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும் உரையும் இன்று பல விமர்சனங்களுக்கு உள்ளானவண்ணமுள்ளன. தற்போது…

Read More

பந்துலவின் இடத்திற்கு காமினி நியமனம்

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் ஹோமாகம தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தை அமைச்சர் காமினி திலக்கசிறி இன்று (22) பெற்றுகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More