Headlines

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடு­மு­றைக்­காக மூடப்­பட்ட நாட்­டி­லுள்ள தமிழ் – சிங்­கள அர­ச­பா­ட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி புதன்­கி­ழமை மீண்டும் கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக திறக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பா­ட­சா­லை­களில் கடந்­த­த­வணை இறு­திநாள் வரை இரண்டாம் தவ­ணைப்­ப­ரீட்­சைகள் நடை­பெற்­ற­தனால் அத்­த­வ­ணைக்­கான மாணவர் முன்­னேற்­ற­ அ­றிக்­கையை வழங்­க­மு­டி­யாத சூழ்­நி­லைக்கு பாட­சா­லைகள் தள்­ளப்­பட்­டி­ருந்­தன. மூன்றாம் தவ­ணைக்­காக மேற்­படி பாட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி மீண்டும் திறக்­கப்­படும். இதே­வேளை நாட்­டி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் நோன்­புப்­பெ­ருநாள் விடு­மு­றைக்­காக கடந்த 06.06.2016முதல் 06.07.2016வரை மூடப்­பட்­டி­ருந்­தன. கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக கடந்த 11ஆம் திகதி மீண்டும்…

Read More

வெளிநாடு போக அனுமதிவேண்டும்: தம்மாலோக்க தேரர்

வெளிநாட்டுக்கு சென்றுவருவதற்கு அனுமதியளிக்குமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர், சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொல்ஹேன்கொட எலன்மெதிணியாராமவில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர், சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும், வெளிநாட்டுக்கு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார். இதுதொடர்பில், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

Read More

உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் 6 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் மேலும் அவற்றுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா…

Read More

மாலபே கல்லூரி விவகாரம் குறித்த போராட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை – கெமுனு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாலபே தனியார் பல்கலைக்கழக பெற்றோர் அமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிராக 6 மருத்துவ பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய பெண்கள் இருவர் கைது

சட்டவிரோமான முறையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட இந்திய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில், விமானத்தின் உள்ளே இருந்த நிலையில் இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 28 மற்றும் 47 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வயிற்றில் வைத்து இந்த தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டுச் சென்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

கட்டுநாயக்க அதிவேக வீதியில் விபத்து : இரு இளைஞர்கள் பலி.!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல வெளியேறும் வாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இருவர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்து தொடர்பான…

Read More

பாவனைக்குதவாத குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

கொழும்பு கொம்பனித்தெரு-அக்பர் மாவத்தை பகுதியில் இருந்து மக்கள் பாவனைக்குதவாத ஒரு தொகை குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர்கள் மூவரை கைது செய்திருப்பதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் இங்கு குடிநீர் போத்தல்கள் விற்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் போத்தல்களில் இலங்கை தரநிர்ணய முத்திரை இருக்கவில்லை என்றும், குறித்த குடிநீர் போத்தல்களில் கழிவுகள்…

Read More

விபத்தில் 12 பேர் காயம்

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நாவலபிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வானும் கினிகத்தேன- கடவள பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 9 பேரும் வானில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் பஸ் தவறான…

Read More

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை 26ஆவது தடவையாக ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

Read More

பேராதெனியவில் துப்பாக்கிச்சூடு:கடை உரிமையாளர் பலி

கண்டி, பேராதெனியவில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பற்சிகிச்சை நிலையங்களுக்கு உபகரணங்கள்

நாடு பூராகவும் உள்ள அரச பற்சிகிச்சை நிலையங்களுக்கு 360 மில்லியன் செலவில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்த உபகரணங்கள் வழங்கி வைப்பதன் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எக்ஸ்ரே இயந்திரங்கள், இரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்த பற்சிகிச்சை நிலையங்களுக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். மேலும், சகல வைத்தியசாலைகளிலும் பூரண வாய்சுகாதார மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு 3000 மில்லியன்…

Read More