Headlines

வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம்

வாகன உரிமையை உறுதி செய்து கொள்ள சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாது வாகனங்களை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வாகன உரிமை கோராது வாகனங்களை பயன்படுத்தி வருவோர் வாகன உரிமையை கோர முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வாகன உரிமை கோரப்படாத வாகனங்களின் உரிமை மாற்றம் செய்யப்படும் போது வழமையாக உரிமை…

Read More

SLS தர நிர்ணய தலைக்கவசங்களுக்கான சட்டம் இன்று முதல் கட்டாய அமுல்

இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று (1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்குடன் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த சட்டமானது பல வருடங்களுக்கு முதலே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதாகவும், தலைக்கவசம் அணியாமல் நாளொன்றிட்கு 7 அல்லது 8 மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே தர நிர்ணயம் கொண்ட தலைக்கவசங்களை மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள்…

Read More

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. “இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த…

Read More

மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய காலக்கெடு

சட்ட ரீதியான முறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

தபாலில் வந்த போதை மாத்திரை

நெதர்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக தபாலில் அனுப்பப்பட்ட போதை மாத்திரை ஒரு தொகை கொழும்பு மத்திய தபால் நிலையத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தபால் பொதியானது கிரான்ட்பாஸ் பகுதி வர்த்தகர் ஒருவருக்கு நெதர்லாந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பெறுமதி 50 இலட்சம் என பிரதி சுங்க அதிகாரி லால் வீரக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த பொதியினை தபால் நிலையத்திலிருந்து விடுவிக்க உதவிய தபால் நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடைய…

Read More

கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார்

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­களின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊ­டாக இலங்­கையின் 37 இணை­யத்­த­ளங்கள் ஊடு­ருவல் செய்­யப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டள்ளது. இந்த…

Read More

வலயக் கல்வி அலுவலகத்தில் தீ

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தீ விபத்தால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மின்சாரக் கோளாரே இந்த தீப் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Read More

மண்ணுக்குள் புதையுண்ட ரோலர் இயந்திரம்!

கினிகத்தேனை – பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது….

Read More

540 சீனி மூடைகள் மாயம்

25 இலட்சம் ரூபா பெறுமதியான 540 சீனி மூடைகள் மாயமாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்து ள்ளது. குறித்த முறைப்பாட்டில், இறக்குமதி  செய்யப்பட்ட 540 சீனி மூடைகளை போக்குவரத்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய போதிலும், அது இன்னும் தமது நிறுவனத்திற்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்த நிறுவனத்திடம் போக்குவரத்து உரிமையை பெற்ற, மற்றுமொரு உப ஒப்பந்த நிறுவனத்தினால் அந்த சீனி மூடை கொள்கலன் எடுத்துச்…

Read More

கொலையாளிகள் மாவனல்லையில் தலைமறைவு?

பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் 8 வர்த்தகர்களின் சாரதிகளிடமும் விசாரணை தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் ஆய்வு விசாரணைக்கு 20 பொலிஸ் குழுக்கள் கொழும்பு,பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமானை படு­கொலை செய்த கொலையாளிகள் மாவ­னெல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய 20…

Read More

இருவருக்கு அமைப்பாளர் பதவி!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன, கண்டி-உடுதும்புரவுக்கான அமைப்பாளராகவும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி- யட்டிநுவரவுக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Read More

சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் தர நிர்ணயமானது – தென்னகோன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – சதொச மற்றும் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் உரிய முறையில் தர நிர்ணயத்துக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனத்தினை பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்வதிலிலுந்து அதனை பாதுகாத்துக் கொள்வது அரச அதிகாரி என்ற வகையில் தமது பொறுப்பு என்றும் கூறினார். அண்மையில் மின்னேரிய பிரதேச அரிசி ஆலையில் மீள் சுத்திகரிப்புக்கு என கொண்டுவரப்பட்டிருந்து ஒரு தொகை அரிசியினை பொது சுகாதார பரிசோதகர்கள்…

Read More