Headlines

மு.கா பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா GS, மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலிக்கு ஆதரவு..!

மட்டக்களப்பு மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, ஓட்டமாவடியில் (04) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஹனீபா GS, அமீர் அலியின் வெற்றிக்கு ஆதரவு வழங்கும் முகமாக, சஜித் பிரேமதாஸவின் மேடையில் கைகோர்த்தார். இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், விஷேட அதிதியாக தேசிய ஐக்கிய முன்னனியின்…

Read More

“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, இன்று (05) மன்னார், பொற்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More

“எமது கட்சி உணர்ச்சி அரசியலை செய்யவில்லை” – சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்!

“பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை. சிலர் கல்முனையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, திகாமடுல்ல மாவட்டத்தில், மயில் சின்னத்தில் இலக்கம் 8 இல் போட்டியிடுகின்ற அவர், கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் (04) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவித்ததாவது,…

Read More

‘கண்டியிலிருந்து ரவூப் ஹக்கீமும் கல்குடாவிலிருந்து அமீர் அலியும் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டின் முதலாம் கட்டம் (03) காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்றபோது, உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எதிர்வரும் பாராளுமன்றத்தில் கட்சி கொள்கைக்கு அப்பால், அனுபவமும் ஆளுமையும் கொண்ட நல்ல அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் எனவும், அந்தவகையில் கண்டியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், வன்னியிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும், கல்குடாவிலிருந்து அமீர் அலியும்…

Read More

கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் (NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினர்உமர் றழி ரனீஸ், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களுடன் இன்று (04) உத்தியோகபூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்துகொண்டார்.   திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பயணத்தில் இணைந்து கொண்ட உமர் அலி ரனீஸ், பொதுத் தேர்தலின் போது…

Read More

‘கல்முனை தொகுதியில் மக்கள் காங்கிரஸ் வரலாறு எழுதும் காலம் கனிந்துள்ளது’ – சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை கல்முனை தொகுதியை வெற்றிகொண்டு வரலாற்றுச் சாதனை படைக்கும்  என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது, அவர் மேலும் கூறியதாவது, “கடந்த தேர்தலில் எவ்வித அதிகாரமும் இல்லாது, அம்பாரை மாவட்டத்தின் சகல ஊர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வியாபிக்கச் செய்ததன்…

Read More

“வாக்குரிமை விடயத்தில் இறைவனை பயந்துகொள்ளுங்கள்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

முப்பது வருட காலங்களாக அரசியலில் கோலோச்சியவர்கள், தேர்தல் வந்தவுடன் அரிசிப்பொட்டலங்களுடனும், பணமூட்டைகளோடும் வீடுவீடாக வருவதென்பது, அவர்களது அரசியல் வங்குரோத்தை எடுத்துக் காட்டுவதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். ஏறாவூர், மீராகேணி மற்றும் ஓட்டுப்பள்ளி பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இப்பொழுது தேர்தல் வந்தவுடன், ஏறாவூர் பற்றுக்கு பாடசாலை தருகிறோம், வீதி தருகிறோம், பூங்கா தருகிறோம் என…

Read More

வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ன செய்திருகின்றார்?

முசலிப் பிரதேசத்தின் பாலைக்குளி, கரடிக்குளி, சிலாவத்துறை, கொண்டச்சி, மறிச்சுக்கட்டி உள்ளிட்ட ஏனைய கிராம முக்கியஸ்தர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு… ! “20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்துக்கு நாங்கள் வந்த போது, இந்தப் பிரதேசம் இருந்த…

Read More

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில், திருமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இன்று மாலை (03) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டார். திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சரத், நளின் பண்டார, டாக்டர் அருண சிறிசேன, நவாஸ் மற்றும் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப்…

Read More

உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில்; அவமானப்படுத்திவிடாதீர்கள்..!

இம் முறை அம்பாறை மாவட்ட அ.இ.ம.காவின் வேட்பாளர் பட்டியல் மிக அழகானது. பல் துறை சார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இக் கட்சியில் மார்க்கத்தை கற்ற இரண்டு உலமாக்கள் போட்டியிடுகின்றமை அதன் விசேடங்களில் ஒன்று. ஒருவர் அக்கறைப்பற்று ஹனீபா மதனி, இரண்டாமவர் இறக்காமம் பிரதேச சபை பிரதி தவிசாளர் நௌபர் மௌலவி. அம்பாறையில் போட்டியிடுகின்ற பலமான கட்சிகளில் அ.இ.ம.காவில் மாத்திரமே மார்க்கத்தை கற்ற உலமாக்கள் போட்டியிடுகின்றனர். இது அ.இ.ம.காவானது உலமாக்களுக்கு வழங்குகின்ற ஒரு மிகப் பெரிய கௌரவமும், அங்கீகாரமுமாகும்.அ.இ.ம.காவின்…

Read More

‘தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலைமாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளது’ – முதன்மை வேட்பாளர் வை.எஸ்.எஸ். ஹமீட்!

தற்போதைய தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலை மாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளமையால், நேர்மையான அரசியல் கலாச்சாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் தனது அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ஜனநாயக தேர்தலை விரும்புகின்ற மக்களின் மனங்களில் இன்று ‘பணம் இல்லையென்றால் தேர்தல் களம் இல்லை’ என்கின்ற…

Read More

“சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்துள்ளனர்”- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சஜித் பிரேமதாஸ தலைமையில், இன்று (03) முல்லைத்தீவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றுகையில்,…

Read More