Headlines

வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு!

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், மக்கள் சந்திப்பும் நேற்று மாலை (08) இடம்பெற்றது. மன்னார், வெள்ளாங்குளத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று உரையாற்றியதுடன், ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.

Read More

‘முல்லைதீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில்  மக்கள் காங்கிரஸ் மூலம் பலகோடி அபிவிருத்திகள்; துன்பங்களில் பங்கேற்காதவர்கள் வாக்குகளுக்காக அலைந்து திரிகின்றனர்’- பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன்!

“கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துச் சென்று, பாராளுமன்றத்தினை அலங்கரித்தவர்கள், இன்று மீண்டும் உங்களிடம் வந்து வாக்களிக்குமாறு கேட்கின்றனர். இவர்களிடத்தில் தாங்கள் உழைத்த சொத்துக்களின் விபரங்களைக் கேளுங்கள்” என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் 6 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் பிரதேச சபை தவிசாளருமான மஹாலிங்கம் தயானந்தன், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளுவர்புரத்தில் இடம்பெற்ற தேர்தல்…

Read More

‘சமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை’ – பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

ஒரு சமூகத்தை அடமானம் வைத்துக் கொண்டு அந்த சமூகத்தை பாதாளத்தினுள் தள்ளிவிட்டு நானும் எனது குடும்பமும் வாழ வேண்டும்  என நான் ஒருபோதும் எண்ணியதில்லை.  அவ்வாறு பிழைப்பு நடத்துகின்ற துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டிய நேரமே இதுவாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்  பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். பிராந்திய மக்களுடனான விசேட சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்;ந்து…

Read More

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதின் பலமும், வெற்றிக்கான சாதகமும்..!

அ.இ.ம.காவில் தேர்தல் கேட்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமான பலம் கொண்டவர்கள். இதில் ஏனைய வேட்பாளர்களை விட மு.மா.ச.உறுப்பினர் ஜவாதிடமுள்ள பலம் என்னவென சிந்திக்கும் போது, மாகாண ரீதியான அதிகாரமொன்றில் இரு தடவை இருந்தவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மாத்திரமே! இவர் 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியிருந்தார். 2012ம் ஆண்டு இடம் பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும், கட்சி மாறியதால் ஏற்பட்ட ஜெமீலின்…

Read More

மக்கள் காங்கிரஸ் மகளிர் விவகாரங்களுக்கான அமைப்பாளர் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, கட்சியின் மகளிர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக ஜான்ஸிராணி சலீம் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன் அவர்களால், அவருக்கான நியமனக் கடிதம் இன்று (08) வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கமையவே, கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு” –

மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் அறிவிப்பு! கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே, இம்முறை பொதுத் தேர்தலில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளதாக, மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் தெரிவித்தார். அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின் பேரில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம்…

Read More

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து – மன்னார், காக்கையன்குளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், காக்கையன்குளத்தில் இன்று (08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், இலக்கம் 1 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன்…

Read More

இருப்புக்களுக்கான இரட்டைச் சவால்கள்!!!

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்” மற்றுமொரு சாதனையாக, இம்முறைத் தேர்தல் வியூகங்கள் அமையவுள்ளன. பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவும் பேரம்பேசலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும், தலைவர் ரிஷாட் பதியுதீன் வகுத்துள்ள திட்டங்கள், மாவட்டங்கள் தோறும் வேறுபடுகின்றன. சாத்தியமான இடங்களில் தனித்தும், சகோதர சமூகங்களின் அபிலாஷைகளை வெல்ல வேண்டிய மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்வரும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில்  பெரும் சக்தியாகத் திகழும். வடபுலத்தவரின் தேவைக்கு குரல்கொடுக்க உதயமானாலும் காலவோட்டத்தில், இத்தலைமையின் தேவை நாட்டின் நாலா திசைகளிலும்…

Read More

அரசியல் களநிலவரம்; வன்னி தேர்தல் மாவட்டம் – அனீஸ் ஷரீப்! 

கடந்த இரண்டு நாட்களாக களத்தில் நின்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரசியல் நிலமைகளை அவதானித்து விட்டு சற்று முன்னரே கொழும்பில் உள்ள எனது வீடு வந்தடைந்தேன். தொடர்ச்சியான பயணம், ட்ரைவிங், சரியான தூக்கமின்மை (கடந்தக 48 மணிநேரத்தில் 4 மணித்தியாலங்கள் மட்டுமே தூங்கக் கிடைத்தது.) என்பவற்றால் மிகவும் உடல் ரீதியாக சோர்வடைந்திருக்கின்றேன். ஆனால் உள்ளமோ பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்கின்றது. காரணம் நான் நேரில் கண்ட அரசியல் களநிலவரம். ACMC மற்றும் SLMC…

Read More

“சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம்” – முசலி, அளக்கட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும் குடியேற்ற முடிந்ததென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீன், நேற்று (05) மன்னார், முசலி, அளக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார். அவர் மேலும்…

Read More

முஸ்லிம்களின் வாக்களிப்பை ஊக்குவிப்பது அவசியம்; ஆபத்தை உணர்ந்து முஸ்லிம் சமூகம் முன்வருமா..?

நாம் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றோம். தேர்தல் நிறைவுற்றதும் அரசியலமைப்பு மாற்றம் உட்பட பல்வேறு ஆபத்துக்களை முகம் கொடுக்க தயாராக வேண்டும். இவற்றை முகம் கொடுக்க பாராளுமன்ற பலம் மிகவும் அவசியமானது. இன்றைய கள நிலவரங்களை வைத்து அவதானிக்கும் போது முன்னரை விட குறைவான பாராளுமன்ற பலமே முஸ்லிம்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பா.உறுப்பினர்கள் இருந்திருந்தார்கள். இதில் ஆறு பேர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்திருந்தனர். இம் முறை முஸ்லிம்…

Read More

“சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறைகொண்டுள்ள ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம்” – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி!

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம் என மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (04) ஓட்டமாவடியில், பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More