Headlines

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “யுத்தத்தால் முற்றுமுழுதாக அழிந்த முல்லைத்தீவு மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதில், நாம் களத்தில் நின்று பணியாற்றியிருக்கின்றோம். துரிதகதியில் மீள்கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்து, முகாம்களிலிருந்த…

Read More

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சிறுபான்மைச்  சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது; சிறுபான்மையினர் பயமுறுத்தப்படும் ஒரு சூழலில் நாம் இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பேரினவாதிகளின்…

Read More

‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – மன்னாரில் சஜித் பிரேமதாஸ!

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (01) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “முஸ்லிம் தலைவர்கள் எவராவது குற்றமிழைத்திருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்த…

Read More

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை!

வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று காலை (01) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…

Read More

சம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் மாஹிரின் வெற்றியை உறுதி செய்கிறது – சம்மாந்துறையில் பெரு வெற்றிக்கு தயாராகும் மயில்

சம்மாந்துறை அரசியலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் நேரடிச் செல்வாக்கு 2008 ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. 2008 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.தே.கவின் நேரடி உறுப்பினராக மு.மா.ச.உ மாஹிர் களம் கண்டார். அதற்கு முன்பு ஐ.தே.கவின் அரசியல் செயற்பாட்டாளராக இருந்திருந்தார். இத் தேர்தலிலும், இதற்கு பின்பு இடம்பெற்ற தேர்தல்களிலும் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் நேரடியாக களம் கண்ட, நேரடியாக களம் காணாத தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் பலத்தை அறிந்து முடியும்….

Read More

எதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..!

கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில், தனிப் பெரும்பான்மை தலையெடுப்பதும், இன்னொரு சமூகத்துக்கான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் இனச்சாயம் பூசி தடுப்பதும் நிலைக்கும் வரை, இன இணக்கங்கள் துருவங்களாகவே தென்படப்போகின்றன. தாம் சார்ந்த சமூகத்துக்கு எதையும் செய்யாத சில மக்கள் பிரதிநிதிகள், இன்னொரு சமூகத்தின் தலைவன் எதையாவது சாதிப்பதை பொறுத்துப்போகும் பக்குவத்தின் அடித்தளத்திலிருந்தே நல்லிணக்கம் சாத்தியப்படும். ஆனால், இப்பக்குவம்…

Read More

திகாமடுல்ல: மயிலின் ஆசனத்தை / ஆசனங்களை சிறிய ஊர்களும் சுவைக்க வாய்ப்புள்ளது..!

அம்பாறை மாவட்ட அரசியல் களம் மிகவும் சூடாக சென்று கொண்டிருக்கின்றது. மரத்தின் கோட்டைக்குள் மயிலின் ஆட்டத்தை அவதானிக்க முடிகிறது. அம்பாறை மாவட்டத்தில் மயில் கட்சியினரின் அரசியல் செயற்பாடுகள் மிக தீவிரமாக காணப்படுகின்றன. இதற்கு பிரதான காரணம் மயிலுக்கு கிடைக்கக் கூடிய ஆசனத்தை / ஆசனங்களை நோக்கி சிறிய ஊர்களும் காய் நகர்த்தக் கூடிய சாதக நிலை உள்ளமையேயாகும். சிறிய ஊர் வேட்பாளர்களும் மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தற்போதைய கள நிலவரங்களின் படி…

Read More

குருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அந்தவகையில், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா, நேற்று மாலை (28), மெடிவெவ, கெகுணகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில், 16 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் குளியாப்பிட்டிய வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய…

Read More

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், மக்கள் காங்கிரஸின் திருமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்!

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றூபினால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை, நகர சபை உறுப்பினர் மஹ்தி மூதூர் தொகுதிக்கான பிரச்சார செயலாளராகவும், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரிஸ் குச்சவெளிக்கான மத்திய குழுத் தலைவராகவும், குறிஞ்சாக்கேணி பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி கிண்ணியா பிரதேச சபையின்…

Read More

“ஐக்கியமும் இறை பிரார்த்தனையுமே சதிகாரர்களை தோற்கடிக்க சரியான மார்க்கம்” – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக என்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில், முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (29) வவுனியா மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “இந்த அரசியல் பயணத்தை ஒரு சமூகப்…

Read More

‘மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். கொவிட்-19 இன் உச்ச தாக்கம் இருந்தபோதும், முழுநேர ஊரடங்குச்சட்டக் காலத்திலும் ஆளுந்தரப்பு, தேர்தல்…

Read More

‘ “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’ – புத்தளம், தில்லையடியில் முன்னாள் அமைச்சர்  ரிஷாட்!

“அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பங்காற்றி இருப்பதாக அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், தில்லையடியில் இன்று காலை (28) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தொடர்ந்து பேசிய அவர், “வடக்கு அகதிகளை அரவணைத்த புத்தளம் மக்களை கெளரவிக்கும் வகையிலேயே, கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் பதவியை அவர்களுக்கு வழங்கி நன்றிக்கடன் செலுத்தியுள்ளோம். மூன்று தசாப்தங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத புத்தளம் மக்களின்…

Read More