Headlines

“சவால் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் அதிகரித்த பிரதிநிதித்துவமே நன்மை பயக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

காலாகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்தவர்கள், வென்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் வை.கே.றஹ்மான் தலைமையில், மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலாவதாக களமிறங்கியபோது, குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர். ஆனால், கடந்த முறை…

Read More

வேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்!

திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி முஷாரப்பை ஆதரித்து, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், நேற்று (26) பொத்துவில், ஹிதாயபுரம் பகுதியில் இடம்பெற்றது. கட்சியின் வட்டார அமைப்பாளர் சகோதரர் மனாப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதேச சபை உறுப்பினர் என்.எச்.முனாஸ், அப்துல் ஹக் மௌலவி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பெருந்திரளான மக்கள் வெள்ளம் புடைசூழ உரையாற்றிய சட்டத்தரணி முஷாரப்பை, பிரதேசவாழ் மக்கள் தோள்களில் சுமந்து, பவனியாக அழைத்து சென்று, பெரும்…

Read More

சாட்சியமளிக்க அனுமதி கோரி, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் அவர்களினூடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ரிப்கான் பதியுதீனின் சட்டத்தரணி அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளர் ஒருவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய…

Read More

மு.க வின் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் . திருகோணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூபை ஆதரித்து, முள்ளிப்பொத்தானை நகரில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ. நஜீமுல்லாஹ்வின் தலைமையில், நேற்று (25) நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, குறித்த மு.கா…

Read More

மு.கா வின் மாவடிப்பள்ளி ஆரம்பகால போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ஆரம்பகால போராளிகள் சிலர், அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மாவடிப்பள்ளிக்கு வருகை தந்த அவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்று, மாவடிப்பள்ளி மத்திய குழு மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜலீல் ஆகியோரின் ஏற்பாட்டில் ( 23 )…

Read More

‘நியாயம் வெல்லட்டும்’ – வை.எல்.எஸ்.ஹமீட்!

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் காங்கிரஸ்தான் தடுத்தது” என்ற பிரச்சாரம் தொடராக குறித்த கட்சியினரால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. பல முகநூல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டபொழுது “ஆம், சந்தேகமில்லாமல் மக்கள் காங்கிரஸ்தான் அதற்கு உடன்படவில்லை; மட்டுமல்ல, அமைச்சர் பௌசியின் வீட்டில் மார்ச் 13, 16ம் திகதிகளில் மக்கள் காங்கிரஸ் –  முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிற்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த…

Read More

அரங்கத்துக்குள் அந்தரங்கம் – நவமணி!!!

இலங்கை முஸ்லிம்களது அரசியல் வரலாற்றில் கடும்போக்கு பெரும்பான்மைச் சக்திகளின் நெருக்குதல்களுக்கான ஓர் அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காணப்படுகின்றார். வன்னியைத் தளமாக ஆரம்பித்து, சமூகத்துக்கான பணியைச் செய்யத் தலைப்பட்ட இந்தத் தலைமைக்கு, பேரினவாதிகளின் நெருக்குதல்கள்தான் பெரும் விளம்பரங்களாகி வருவதாக, ஏனைய தலைமைகள் கிசு கிசுப்பதாகவும் ஊரூராகப் பேச்சு. பெரும்பான்மை மொழி ஊடகங்களில் இவரின் பெயர் சொல்லாத செய்திகள் இல்லை. குற்றம் சுமத்துவதையே தொழிலாகக்கொண்டு இவ்வூடகங்கள் செயற்படுவதாக, சிறுபான்மைத் தளங்களில் பல பேச்சுக்களும் அடிபடுகின்றன. தேர்தல் காலத்தில்…

Read More

‘தேசியப்பட்டியல் பதவியை சம்மாந்துறைக்கு வழங்கி, அம்பாறை மக்களை மக்கள் காங்கிரஸ் கௌரவித்தது’ – வேட்பாளர் மாஹிர்!

சம்மாந்துறை தொகுதி இரண்டு முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற அதே சமயம், கணிசமான வாக்குகளை முஸ்லிம் காங்ரஸிற்கு மக்கள் வழங்கியிருந்த போதும், சம்மாந்துறை மக்களை கௌரவப்படுத்தும் முகமாக, ஒரு வருடமேனும் தேசியப்பட்டியல் பதவியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென மு.கா வினர் ஒரு போதும் எண்ணியதில்லை என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் சார்பில், திகாமடுல்ல மாவட்டத்தில், இலக்கம் 4 இல் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் மாகாண…

Read More

‘புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கு சிறந்த வியூகம்’ – வேட்பாளர் அலி சப்ரி ரஹீம்!

புத்தளம் மாவட்ட சிறுபான்மைச் சமூகம், கடந்த 33 வருடகாலமாக பெற்றுக்கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெறுவதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து, அதனை இல்லாமல் செய்துவிட வேண்டாம் எனவும் புத்தளம் மாவட்ட தராசு சின்ன முதலாம் இலக்க வேட்பாளர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தான்தீவு கொலணி மற்றும் றஹ்மத் நகர் பிரதேசங்களில் நேற்று இரவு (24) இடம்பெற்ற பிராசரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர்…

Read More

அரசியல் அதிகாரம் இல்லாத போதும் அம்பாறை மக்களுக்கு, மக்கள் காங்கிரஸ் பெரும் பணியாற்றியுள்ளது’ – வேட்பாளர் ஹனீபா மதனி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறிவிட்டார் எனவும், அதில் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு  குறுகிய காலத்துக்குள் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே, சிறுபான்மை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே சமூக நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி கிட்டும்’ – கட்சியுடன் இணைந்துகொண்ட மாற்றுக் கட்சி மாதர் சங்கங்கள் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருதரங்கு மற்றும் வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடனான விசேட சந்திப்புக்களிலும்  கலந்துகொண்டார். அதன் ஓர் அங்கமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (23) மாவடிப்பள்ளிக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்றை, கட்சியின் மாவடிப்பள்ளி…

Read More

தன்னை நம்பிய சமூகத்திற்காக எதனையும் இழக்க துணிந்தவரே ஜவாத்…!

இன்றுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மிகவும் வேறுபட்டவர். அவரின் தோற்றம் சிங்கத்தை நேரடியாக பார்ப்பது போன்றிருக்கும். அவரின் பேச்சு சிங்கத்தின் கர்ஜனையாகவே இருக்கும். தோற்றத்திலும், பேச்சிலும் மாத்திரமல்ல வீரத்திலும் அப்படியே இருப்பார். இவரிடம் பல நல்ல பண்புகளுள்ளன. அதில் மிக முக்கியமானதே சுயநலம் பார்க்காது, நீதிக்காக எதனையும் இழக்க துணிவதுதான். மறைந்த தலைவர் அஷ்ரபோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்களில் இவரும் ஒருவர். அவரது மேடைப் பேச்சுக்கள் எப்போதும் மறைந்த தலைவரை விழித்ததாகவே இருக்கும்….

Read More