Headlines

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்!




எதிர்வரும் பொதுத்தேர்தலில், திருமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இன்று மாலை (03) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டார்.

திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சரத், நளின் பண்டார, டாக்டர் அருண சிறிசேன, நவாஸ் மற்றும் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.