Headlines

மன்னார் பிரதேசபை உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியால் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியில், நீண்ட நாட்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்த தலைமன்னார் பியர் வட்டாரம் அம்பாள் நகர் வீதி மற்றும் தலைமன்னார் பியர் கடற்கரை வீதி  ஆகிய பாதைகளின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தலைமன்னார் பியர் வட்டார முக்கியஸ்தர் எஸ்.எம்.முஸம்மில் மற்றும் ஊரின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (ஐ)      

Read More

‘நல்லெழில்’ நூல் வெளியீட்டு வைபவம்!

புத்தளம்/நல்லாந்தலுவை ஆரம்பப் பாடசாலையில் நேற்று முன்தினம் (14) “நல்லெழிழ்” நூல் வெளியீட்டு வைபவம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிப் பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் உறையாற்றுகையில், “இப்பாடசாலையின் இன்றைய கல்வி எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதோடு, இன்றைய நாளில் இப்பாடசாலையின் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூல் வைபவத்திலே, இந்தப் பாடசாலையின்…

Read More

யாழ் சோனகத் தெருவில் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ் நிலாமின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க, யாழ் மாநகர முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களின் அனுமதியினால் யாழ் மாநகர சபையினால் நேற்று முன்தினம் (14) சோனகத் தெருவில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. புனித ரமழானை முன்னிட்டு இந்தப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டமையால். தமது மார்க்கக் கடமைகளை  மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்  எனவும்,  அதற்காக உறுப்பினர் நிலாம் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்….

Read More

கல்பிட்டியில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர்!

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து, கல்பிட்டி அல்-மனார் கிராமத்தில் வசித்துவரும், தலைமன்னார் பியர் வட்டார மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ். எச். எம்.முஜாஹிர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமது சொந்த மண்ணில் குடியேற இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தவிசாளரிடம் எடுத்துக்கூறினர். இவர்களின் பிரசினைகள் தொடர்பாக வெகுவிரைவில் கட்சித் தலைமையோடும், உரிய அதிகாரிகளுடனும் பேசி நல்ல முடிவினை தருவதாகவும், இந்த சந்திப்பின் போது தவிசாளரினால் முடிவுகள் எடுக்கப்பட்டது….

Read More

‘பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்’ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்!

-முர்ஷித்- சனசமூக நிலையங்கள் பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல், சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக மாறவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்பட வேண்டும். ஆனால்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுகீட்டில் மாவடிப்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிப்பு!

-ஊடகப் பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட தளபாடப் பொருட்களில் ஒரு பகுதி, மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் (14) ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில், காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலினால், அதிபரிடம்  கையளிக்கப்பட்டது. கடந்தவாரம் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட உறுப்பினர் ஜலீல், பாடசாலையின் தேவைப்பாடுகள், குறைகளைப் பற்றி…

Read More

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து!!!

-சுஐப் எம் காசிம்- சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டப் புறப்பட்ட எந்தக்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் தளத்தை பரந்தளவில் பலப்படுத்தவில்லை. முப்பது வருடப் போரின் வடுக்கள் இந்த ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும் பங்கமாக அல்லது சந்தேகமாக இருந்திருக்கும். ஆனால் இனியும் இவ்விரு சமூகங்களையும் சந்தேகம், பகைமை, வேற்றுமைகள் தொற்றிக்கொள்ள இடமளிக்கக்கூடாது. பெரும்பான்மை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைகள் சிறுபான்மை சமூகங்களின் ஒன்றித்தலை அவசரமாக உணர்த்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இரண்டு கட்சிகளாகக் கூறுபட்ட சிங்களப் பெரும்பான்மை வாக்குகள் இம்முறை…

Read More

வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

மன்னார், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (15) வவுனியா ஓவியா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலி, மன்னார், மாந்தை, மற்றும் நானாட்டான் உட்பட வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (ஐ)  

Read More

மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக முசலிப்பிரதேசபையில் கண்டனத்தீர்மானம்…

முசலிப்பிரதேசபை தவிசாளர் சுபியான் தலைமையில் ஆரம்பமான 3வது சபை கூட்டத்தில் சிலாபத்துறை வீட்டுத்திட்டம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது . அதன் பின்பு மன்னார் நகரசபை தலைவார்  ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) செயற்பாடுகளை கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….. முசலிப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் பிரதேசத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட மன்னார் நகரசபை தலைவரின் செயற்பாடு பிரதேச மக்களின் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்மத்தியில் பிரதேசபை…

Read More

குருநாகல் மாவட்டத்தின் பல கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அஸார்தீன் மொய்னுதீனின் தலைமையில், பரகஹதெனிய, அரபா பாடசாலையில் நேற்று முன்தினம் மாலை(13) இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவத்தகம பிரதேச சபை வேட்பாளர் முஆத் பாரூக் தலைமையிலான சுமார் 400 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல்…

Read More

காத்தான்குடி மீனவர்களைச் சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்!

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் நேற்று  (13) இடம்பெற்றது. காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீனவர்களின் கேட்டறிந்து கொண்டார். இதன்போது ஷாதுலியா மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.அப்துல் றஸ்ஸாக், செயலாளர் முஹம்மது பாறூக், ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட மீனவர் சங்க பிரதிநிதிகள்…

Read More

முள்ளிப்பொத்தானை பிரதேச வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும்,  கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூபின் முயற்சியில், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள வீதிகளுக்கான மின் விளக்குகளைப் பொருத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், புனித ரமழானை முன்னிட்டு, நேற்று (13) முள்ளிப்பொத்தானை பிரதேசத்தின் ஒரு பகுதியில் உள்ள வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் டாக்டர்.ஹில்மி மஹ்ரூபினால் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இந்தப் பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.    …

Read More