Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன்” எம்.பி பதவியை இராஜினாமாச் செய்த நவவி அறிவிப்பு!

-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு- பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் இராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று (23) இராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறியுள்ளதாவது, கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின்…

Read More

தர்கா நகர் வாசிகசாலை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான முடிவு!

பேருவளை பிரதேச சபைக்கு உற்பட்ட தர்கா நகர் வாசிகசாலையில் தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், தர்கா நகர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்கா நகர் வாசிகசாலைக்கு தமிழ் மொழி தெரிந்த அதிகாரியை நியமிக்கும்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்றைய சபைக்கு முன்வைத்த கோரிக்கை சபையால் அங்கீகரிக்கப்பட்டது. ஹஸீப் மரிக்காரின் இக்கோரிகை சபையில் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போது, இக்கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டியது…

Read More

“Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வு!

 -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் “Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு நிகழ்வு, கண்டி கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ள புதிய அலுலகக் கட்டிடத் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், கட்சியின் செயலாளர் சுபைர்தீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார், கண்டி…

Read More

சிலாவத்துறை வீட்டுப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு!

-ஊடகப்பிரிவு- சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. முசலிப் பிரதேச செயாலாளர் வசந்த குமாருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று காலை (23) நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, வீட்டுத்திட்ட பிரச்சினையை சுமுகமான முறையில் தான் தீர்த்துத் தருவதாக பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.   இந்த சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், முசலிப் பிரதேச சபையின் தவிசாளர் சுபியான், பிரதித் தவிசாளர் முஹுசீன் றைசுதீன்…

Read More

மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள“மாந்தை பிரதேசத்தின் மகிமை”

–சுஐப் எம்.காசிம்- மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச சபைகளின் தவிசாளர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்ப் பெருமகன்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசம் 100 சதவீதமான தமிழர்கள் வாழும் பகுதி. மாந்தை மேற்கிலே இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆகிய மூவினங்களும் வாழ்கின்ற போதும், முஸ்லிம்களை விட மற்றைய…

Read More

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்! சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை!

-ஊடகப்பிரிவு- வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 38000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அகதியான மக்களுக்கு உதவும் வகையிலேயே பிரதேச செயலாளருக்கூடாக உணவுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு…

Read More

தமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப் பின்னரான புரிதல்..!

-சுஐப்.எம்.காசிம்- வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை,அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் சித்தாந்தங்கள், விடுதலைப் புலிகளின் மறைவுக்குப் பின்னரும் பிளவுபட்டதாகவேயுள்ளது.  தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் துரதிஷ்டவசமாக படுகொலைப் போராட்டமாகப் பரிணமித்ததால், இவ்விரு சமூகங்களின் வாழ்விடங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆள்புல எல்லை, அரசியல்…

Read More

முசலி பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக காணி வழங்க தடை! அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முடிவு!

-ஊடகப்பிரிவு- மத்திய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு நபர்களுக்கோ  நிறுவனங்களுக்கோ முசலிப் பிரதேசத்தில் காணிகளை வழங்குவதை முசலி பிரதேச அபிவிருத்தி குழு தடைசெய்துள்ளது. மேற்குறிப்பிட்ட சாரார் காணிகளைப் பெற்றுக்கொண்டு தாங்கள் விரும்பியவாறு வளங்களை சூறையாடுவதாலும் சூழலை மாசுபடுத்துவதாலும் மற்றும் உள்ளுர்வாசிகளின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்துவதாலுமே அபிவிருத்திக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. முசலி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினா;களான காதர் மஸ்தான் சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று காலை…

Read More

தோப்பூர் “நிலசெவன” கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் முன்மொழிவில் நிர்மாணிக்கப்பட்ட, தோப்பூர் “நிலசெவன” கட்டிடம் மற்றும் மூதூர் புதிய பிரதேச செயலக கட்டிடம் ஆகியன அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ன சிங்கம் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். (ன)    

Read More

கொத்தாந்தீவு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்!

புத்தளம்,  கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தகர்கள் ஆகியோர், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் அவர்களை  அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போது, தங்கள் ஊரின் பல இடங்களில் தெருவிளக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை காணப்படுகின்றது எனவும், எனவே இந்தப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட  பிரதேச சபை உறுப்பினர்…

Read More

“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்” நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு-   ஆசிரியர்களை இடமாற்றஞ் செய்யும் போது, அந்தந்த பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்களை நிரப்பாமல் அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை (21) நானாட்டான் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்த ராஜாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, காதர் மஸ்தான் எம்.பி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக்…

Read More