Headlines

“கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்”- இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடிப் படையினரை கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு பெற்றுக் கொண்டமைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வும், பொதுக் கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில்…

Read More

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைப்பு!

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கிராம மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தநிலையில் அவர்களுக்கான விரைவான ஒரு செயற்திட்டமாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுச்சங்க அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின்…

Read More

அனர்த்தம் தொடர்பாக பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!!

கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அந்தவகையில், கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் (28) இரண்டு மணியளவில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயாகமகே, அலவத்துவல, இராஜாங்க…

Read More

மடாட்டுகம பகுதி மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளிற்கு இணங்க மேர்சி லங்கா நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம பகுதியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது. இது மக்கள் பாவனைக்காக 2018.12.27 அன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பிரதேச மக்கள், மேர்சி லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எம்.ஆர்.எம். முனாஸ், கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினர் ஷாலித்த…

Read More

“வடகிழக்கு மக்களின் துயர் துடைக்க இறைவன் எங்களுக்கு சந்தர்ப்பம் தந்துள்ளான்” இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்பாக முதன்முதலாக வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவருக்கு விவசாய, நீர்பாசனத்தோடு சேர்ந்த கிராமிய பொருளாதார அமைச்சை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியமைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர்,…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பொதுஹெர கிராமிய குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் பொதுஹெர வட்டார வேட்பாளர் ரஜாப்தீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது. எனவே…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லங்கா சதொச மூலம் விநியோகம்! அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக பெய்துவந்த மழையினால் வடக்கில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இம்மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம் காணப்படுவதாகவும், இதனை கட்டுப்பாடும்,…

Read More

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று (26) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆராச்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான குழுவினர் விஜயம்!

தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், உயர்மட்டக் குழுவினர் அங்கு விசேட உலங்கு வானூர்த்தியில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினையடுத்து வடக்கில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானதையடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பிட்ட மாவட்டங்களில் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புக் கொண்ட அமைச்சர், கடும் மழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வகையில் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே வேளை இந்தப் பிரதேசங்களின் நிலைமை குறித்து…

Read More

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் “கிராம சக்தி” நிகழ்ச்சித் திட்டம்!

“கிராம சக்தி” எனும் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(21) மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிலங்குளம், பறப்பான் கண்டலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் மக்களின் அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. தவிசாளர் முஜாஹிர் இங்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அரசியல் கலாச்சாரம் சீரழிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்திலும் எமது அமைச்சர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பல இடர்களுக்கும் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும்…

Read More

பாரளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இராஜாங்க அமைச்சராக நியமனம்!

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று மாலை (21) ஜனாதிபதி முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்தார்.

Read More