Headlines

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை  பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். AISEX மற்றும் FASE ஆடைத் தொழிற்துறைக்கான எக்ஸ்போ கண்காட்சியின் 08வது பதிப்பின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்;. இந்நிகழ்வில்…

Read More

‘அமைச்சர் ரிஷாத்தின் சேவையின் பிரதிபலனே வன்னியில் 04 சபைகள் கிடைத்தது’ தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு!

-பரீட் இஸ்பான்- நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னியில் 4 சபைகளின் தவிசாளர்களையும் 2 பிரதித் தவிசாளர்களையும் 66 உறுப்பினர்களையும் (மன்னார் – 34, வவுனியா 20, முல்லைத்தீவு 12) பெற்று வன்னியிலே மாபெரும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கியமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் சேவையின் வெளிப்பாட்டுக்கான அடையாளமே என மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்துள்ளார். மேலும்…

Read More

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!

-ஊடகப்பிரிவு- தீப்பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளை நீக்கும் வகையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின் போது, சில முன்னேற்றகரமான தீர்வுகள் கிடைக்கப்பெற்றதாக தாக அந்தச் சங்கத்தின் தலைவர் பி.டி.ஆர்.ராஜனும், செயலாளர் கே.ஏ.எஸ்.ஹைதர் அலியும் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்புகொண்டு, தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய இரசாயனப்பொருட்களான பொட்டாசியம் குளோரைட் மற்றும் சிவப்பு பொசுபரஸ் ஆகியவற்றின் இறக்குமதியில், பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளை நீக்கித்தருமாறு விடுத்த…

Read More

“வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள்” அமைச்சர் பொன்சேகாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்! 

-எப்.சனூன்- வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே,…

Read More

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-சுஐப் எம்.காசிம்- மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் கலந்துரையாடல், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.எல்.நஸீர் தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு…

Read More

விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இஷாக் எம்.பி உடன் நடவடிக்கை!

-எப்.சனூன்- அனுராதபுர மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மேற்கொண்ட முயற்சியினால், யோதஎல கால்வாயை சுத்தம் செய்யும் பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டன. கலாவெவ குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரினை வழங்கும் “யோதஎல” கால்வாயினில், அதிகளவில் வளர்ந்திருந்த சல்வீனியா தாவரங்கள் மூலம், முறையாக நீரினைப் பெற்றுக்கொள்வதில், அப்பிரதேச விவசாயிகள் மிகவும் சிரமத்தை  எதிர்நோக்கியிருந்தனர். இந்தப் பிரச்சினை தொடர்பில் தமக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு, இஷாக் ரஹ்மான் எம்.பியிடம்  அப்பிரதேச விவசாயிகள் வேண்டியிருந்தனர். இதனை…

Read More

யாழ் தமிழ் பிரதேச மக்களை சந்தித்த உறுப்பினர் நிலாம்!

-எப்.சனூன்- யாழ்ப்பாணம் கமால் ஒழுங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை கண்டறியும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம், நேற்று (09) அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். அந்தப் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய உறுப்பினர் நிலாம், அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்தாலோசித்தார். இந்த சந்திப்பின்போது, மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களான ஆர்.கே.சுவர்கஹான் மற்றும் எம்.எச்.எம் சினாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.  …

Read More

மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகளை  செப்பனிட நடவடிக்கை!

-பரீட் இஸ்பான்- முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில், நீண்ட காலமாக செப்பனிடப்படாத நிலையில் காணப்பட்ட உள்ளக வீதிகளை, சுமார் 40 கி.மீ வரை கிரவலிட்டு செப்பனிட  மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயாநந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்,  பாதைகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள், சபையின் கீழ் உள்ள இயந்திரங்களின் ஊடாக துரிதகதியில் ஆரம்பிக்கப்படுமென்று தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் தேர்தல் காலங்களில் வழங்கிய…

Read More

புனித செபஸ்தியன் கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் விஜயம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸ், கொழும்பு,  புனித செபஸ்தியன் கல்லூரிக்கு  இன்று (09) விஜயம் செய்து, பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் றம்சி அவர்களும் பங்கேற்றிருந்தார்.  

Read More

சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர் ஜஹாங்கீர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தார்!

-ஊடகப்பிரிவு- இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருக்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமான மு.ஜஹாங்கீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸீப் மரிக்கார், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேவேளை, மு.ஜஹாங்கீரால் எழுதப்பட்ட “சிறகிருந்தால் போதும்” எனும்…

Read More

மக்கள் சந்திப்பு

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அமைச்சில் (09) இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் சந்திப்பில், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிடீன் மற்றும் அமைச்சின் அதிகாரி லலத் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.    

Read More

‘உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று (08) “உணவுக்கான எதிர்காலம்” என்ற தலைப்பில் மூன்று நாள் அமர்வுக்கொண்ட மாநாட்டுத் தொடரை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த அமர்வின் முடிவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More