Headlines

மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு! 1Kg தனி இறைச்சி ரூபா 850 க்கு விற்பனை செய்ய தீர்மானம்!

-முர்ஷித்- மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (18 ) இடம்பெற்றது. இதன்போது இறைச்சிக்கடைகளின் சுகாதார நிலைமைகள், அறுவைக்காக மாடுகளைக் கையாளும் நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், மாட்டிறைச்சிக்கான விலை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர், எதிர்வரும்…

Read More

கலாவெவ பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பிரதித் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுனின் முயற்சியில்,  அனுராதபுரம், இப்பொலோகாம பிரதேச சபைக்குட்பட்ட, கலாவெவ மத்திய கல்லூரியின் மைதானத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்,  நேற்று (17)  பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் இப்பொலோகாம பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள்களும் கலந்துகொன்டனர். (ஸ)…

Read More

“சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர்” பிரதியமைச்சர் அமீர் அலி!

சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், விவசாய சங்கங்களுக்கு நீர் இறைக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (16) மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு…

Read More

சுத்தமான குடிநீர் திட்டம்!

மன்னார் மாவட்டத்தின், தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.நயீம் வேலைத்திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். (ஐ)  

Read More

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் மக்கள் மண்டபம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், இஷாக் ரஹுமான் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அனுராதபுரம், கெப்பிதிகொல்லாவ பிரதேச சபைக்குட்பட்ட ஏக்கர் ஐந்து எனும் கிராமத்தில், பொதுமக்கள் பாவனைக்காக மக்கள் மண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கெப்பித்திகொல்லாவ பிரதேச சபை உறுப்பினர் இப்ராஹீமின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இந்த மக்கள் மண்டபத்தின் திறப்புவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகப் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வின்போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த பதிவு…

Read More

“நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார்!

நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தெரிவித்தார். மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்தால், மேல் மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று (15) எம்பிலிபிட்டிய இராணுவ முகாமில் இடம்பெற்றது. பேருவளை, புலத்சிங்ஹல, ஹொரணை, திவுலப்பிட்டிய ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கூறியதாவது, எமது நாட்டில் காலத்துக்கு…

Read More

கவிதை நூல் வெளியீட்டு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

வாலாட்டும் கூட்டம் அரசியல்வாதிகளை சுற்றித் திரிவதாக, முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கொடகே தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதல்பரிசு பெற்ற கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய “மழை நின்ற போதும்” கவிதை நூல் வெளியீட்டு விழா, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்சொன்னவாறு…

Read More

மன்னார் பிரதேசபை உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியால் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.நயீமின் முயற்சியில், நீண்ட நாட்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்த தலைமன்னார் பியர் வட்டாரம் அம்பாள் நகர் வீதி மற்றும் தலைமன்னார் பியர் கடற்கரை வீதி  ஆகிய பாதைகளின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தலைமன்னார் பியர் வட்டார முக்கியஸ்தர் எஸ்.எம்.முஸம்மில் மற்றும் ஊரின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (ஐ)      

Read More

‘நல்லெழில்’ நூல் வெளியீட்டு வைபவம்!

புத்தளம்/நல்லாந்தலுவை ஆரம்பப் பாடசாலையில் நேற்று முன்தினம் (14) “நல்லெழிழ்” நூல் வெளியீட்டு வைபவம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிப் பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் உறையாற்றுகையில், “இப்பாடசாலையின் இன்றைய கல்வி எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதோடு, இன்றைய நாளில் இப்பாடசாலையின் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூல் வைபவத்திலே, இந்தப் பாடசாலையின்…

Read More

யாழ் சோனகத் தெருவில் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ் நிலாமின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க, யாழ் மாநகர முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களின் அனுமதியினால் யாழ் மாநகர சபையினால் நேற்று முன்தினம் (14) சோனகத் தெருவில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. புனித ரமழானை முன்னிட்டு இந்தப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டமையால். தமது மார்க்கக் கடமைகளை  மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்  எனவும்,  அதற்காக உறுப்பினர் நிலாம் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்….

Read More

கல்பிட்டியில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர்!

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து, கல்பிட்டி அல்-மனார் கிராமத்தில் வசித்துவரும், தலைமன்னார் பியர் வட்டார மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ். எச். எம்.முஜாஹிர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமது சொந்த மண்ணில் குடியேற இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தவிசாளரிடம் எடுத்துக்கூறினர். இவர்களின் பிரசினைகள் தொடர்பாக வெகுவிரைவில் கட்சித் தலைமையோடும், உரிய அதிகாரிகளுடனும் பேசி நல்ல முடிவினை தருவதாகவும், இந்த சந்திப்பின் போது தவிசாளரினால் முடிவுகள் எடுக்கப்பட்டது….

Read More

‘பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்’ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்!

-முர்ஷித்- சனசமூக நிலையங்கள் பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல், சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக மாறவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்பட வேண்டும். ஆனால்…

Read More