அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுகீட்டில் மாவடிப்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிப்பு!
-ஊடகப் பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட தளபாடப் பொருட்களில் ஒரு பகுதி, மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் (14) ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில், காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலினால், அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடந்தவாரம் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட உறுப்பினர் ஜலீல், பாடசாலையின் தேவைப்பாடுகள், குறைகளைப் பற்றி…
