Headlines

33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது

பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும். பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் ஒன்­றாக இது இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இப்­…

Read More

அம்பாறையில் வரட்சி: வற்றிய குளங்களிலிருந்து வெளிவரும் முதலைகள்!

அம்­பாறை மாவட்டத்தில் நிலவும் வெப்­ப­மான கால நி­லை­யினால்  நீர்த் ­தட்­டுப்­பாடு நில­வு­கி­றது.   கடந்த இரண்டு மாத ­கா­ல­மாக மழை­வீழ்ச்சி கிடைக்­காதன் கார­ண­மாக மலைப்­ பி­ர­தேச காடுகள் வரண்டு காணப்­ப­டு­வ­தினால் வன ஜீவரா­சிகள் நீர் உணவு தேடி மக்கள் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் அலைந்து திரி­கின்­றன. நீர்­நி­லைகள் வற்­றி­யதால் முத­லை­களும் வெளியே வந்துள்ளன.

Read More

வனப்பகுதியில் தீ பரவல்

மஹியங்கனை கண்டி வீதியில் 18 வளைவுகள் உள்ள பிரசித்தமான இடத்திற்கு அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீபரவியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி காட்டுத்தீ 18 வளைவுகளைக் கொண்ட இடத்தில் உள்ள 17 வது வளைவிற்கு சமீபமாக இடம்பெற்றுள்ளதாக ஹஸலக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குருலுபொத்த என்ற இடத்திலிருந்து பிட்டதுன்ன என்ற இடத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தீபரவியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. முப்படைகளில் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

எங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்

இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் ராம்குமார் இறந்தார் என்பது பொய். சிறையிலேயே இறந்துவிட்டார் என்று நம்மிடம் பகீர் வாக்குமூலம் கொடுக்கிறார் புழல் சிறைக் கைதி ஒருவர். சுவாதி கொலையின் போது கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் புழல் சிறை நிரம்பி வழிந்தது. ராம்குமாரால்…

Read More

விசர் நாய் கடி: மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைப்பு

விசர் நாய் கடி நோய் (ரேபிஸ்) மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கால்நடை சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இந்த நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக விசர் நாய் கடி நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். விசர் நாய் கடி மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை…

Read More

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங்…

Read More

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

 யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Read More

ஞானசாரரை கைது செய்திருந்தால், வன்முறை வெடித்திருக்கும் – பசில்

அளுத்­க­மையில் இடம் பெற்ற வன்­முறைச்  சம்­ப­வங்­களின் பின்  பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர்  ஞான­சார தேரரைக் கைது செய்­தி­ருந்தால் நாடெங்கும் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான வன்­மு­றைகள்  உரு­வா­கி­யி­ருக்கும். இத­னா­லேயே ஞான­சார தேரர்  கைது செய்­யப்­ப­ட­வில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரி­வித்தார் . பத்­த­ர­முல்லை,நெலும் மாவத்­தை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம்  நடை­பெற்ற  ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு  கூறினார். அவர் தொடர்ந்தும்  உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, அளுத்­க­மயில் பொது­ப­ல­சேனா ஏற்­பாடு செய்த…

Read More

ஞானசாரதேரருக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் திருத்தம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை திருத்தி, எதிர்வரும் 13ஆம் திகதியன்று முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டுள்ளது. திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் தொடர்பில் ஏதாவது எதிர்ப்பு இருக்குமாயின், அதனை எழுத்துமூலமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

Read More

எலும்புக்கூடு முழுமையாகவுள்ளது

‘லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தினது எலும்புக்கூடு, முழுமையாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம், குறித்த சடலம், பொலித்தீன் உறையொன்றினால் முழுமையாகச் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே, சடலத்தைத் தோண்டி எடுக்கும்போது அதன் எலும்புக்கூடு முழுமையாக இருந்தது” என சடலம் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சீ.ரணகல தெரிவித்தார். சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த லசந்த விக்கிரமதுங்கவை, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய டாக்டர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கும் இடையே, பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றது….

Read More

யார் முன்னிலையிலும் அரசாங்கம் மண்டியிடாது

நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமானது யார் முன்னிலையும் மண்டியிடாது. எனினும், சகலருக்கும் காது கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சாதாரண கோரிக்கைகளை யாராவது முன்வைத்தால், அவற்றுக்கு அரசாங்கம் காதுகொடுக்கும்.  எனினும், கண்டித்தோ அல்லது பயமுறுத்தியோ…

Read More