Headlines

கடன் சுமையை குறைப்பதற்கு உறுதி

சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்கான பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகள் நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு முன்வந்துள்ன. 1961ம் ஆண்டில் நிறுவிப்பட்ட  முக்கிய அங்கத்துவ நாடுகள அமெரிக்கா, ஜேர்மன்,பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.

Read More

‘ஆசிரியையின் வாயை மூடியது தவறு’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு, மஹாநாம வித்தியாலயத்தின் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன், குறித்த ஆசிரியைக்கு நட்டஈடு வழங்குமாறும், பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை அரசியல் அமைப்பில் 12.1 உறுப்புரை மற்றும் 14.1 உறுப்புரையில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12….

Read More

“தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம்” – ரஞ்சித் அலு­வி­கார

-ARA.Fareel- தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால்  பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. இப்­பி­ரச்­சினை  தீர்க்­கப்­ப­டா­விட்டால் தம்­புள்ளை  பள்­ளி­வா­ச­லுக்கு  மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம் என மாத்­தளை  மாவட்ட பாராளு­மன்ற  உறுப்­பினர்  ரஞ்சித்  அலு­வி­கார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  முறை­யிட்­டுள்ளார். தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல்  விவ­காரம்  தொடர்பில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு  பல­வ­ரு­டங்கள்  கடந்­து­விட்­டன. பள்­ளி­வாசல்…

Read More

இலங்கை அணுசக்தி சபையில் வாய்ப்பு!

இலங்கை அணுசக்தி சபையில் விஞ்ஞானவியல் உத்தியோகத்தர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016-10-14.

Read More

மஹிந்தானந்தவுக்கு மீண்டும் அழைப்பு!

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத் தீயினை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்று வீட்டு வாசலில் இறங்க முற்பட்டவேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு…

Read More

23.2 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப் பெரிய கோவா

23.2 கிலோ­கிராம் (51 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்­டனில் அறு­வடை செய்­யப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் தென்­மேற்குப் பிராந்­தி­ய­மான கோர்ன்­வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்­பவர் இந்த கோவாவை அறு­வடை செய்­துள்ளார். வோர்­செஸ்­ட­ஷயர் பிராந்­தி­யத்தில் கடந்த வாரம் நடை­பெற்ற பிரித்­தா­னிய தேசிய பாரிய மரக்­கறி போட்­டி­களில் இந்த கோவா காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது. உலகின் மிகப் பெரிய கோவா எனும் 90 வரு­ட­கால சாத­னையை இந்த கோவா முறி­ய­டித்­துள்­ளது. இதற்குமுன் 1925 ஆம் ஆண்டு அறு­வடை செய்­யப்­பட்ட 19.05 கிலோ…

Read More

அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓர் அறிவித்தல்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில் தகைமை மாணவன் என்று குறிப்பிட்ட அடையாள அட்டையை இறக்கும் வரை பாவனை செய்து கொண்டு வருபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான வழிகளும், விதிமுறைகளையும் அத்தோடு பலருக்கு தெரியாத விடயங்களை பார்க்கலாம். முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள். இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப்…

Read More

முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும்…

Read More

வரட்சியால் நாட்டில் மின்சாரம் தடைப்படாது

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது. நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த…

Read More