Headlines

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…

Read More

கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றிற்கு வருகை!

கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போழுது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத் தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

Read More

சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

ஞானசாரர் தலைமையில் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது…

Read More

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 – 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில நடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது வீடுகளில் இருந்து பொருட்கள் ஆடியதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடுமையான வரட்சி காலநிலை காணப்படுகின்ற நிலைமையினால் இவ்வாறான நில நடுக்கம் உணரப்பட்டதாக அல்லது வேறு சம்பவங்களினால்…

Read More

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்ந்துங்கள் – கல்வி அமைச்சர்

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது என அவர் கோரியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும். தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்…

Read More

கோத்தபாய நீதிமன்றில் இன்று ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. காலி துறைமுகத்தில் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை இயக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8…

Read More

ஆளுமையுள்ள அரசியல்வாதியாய் இருப்பதாலேயே றிஷாத் மீது கல்லெறிகின்றனர்

– சுஐப் எம் காசிம் – வட மாகாண அரசியல்வாதிகள் அத்தனை பேரிலும் ஆளுமையுள்ள அரசியல் தலைவராகவும் மக்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலேயே அவர் மீது சிலர் கல்லெறிகின்றார்கள் என்று அமைச்சரின் மாந்தை மேற்கு பிரதேச இணைப்பாளரும் சமூக சேவையாருமான செல்லத்தம்பு தெரிவித்தார். மன்னார் நகர மண்டபத்தில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கடந்த அரசில் தமது…

Read More

மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

கண்டி – செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று  (29)நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். குறித்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்போது கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்; அமைச்சர் றிசாத் உருக்கமான வேண்டுகோள்! சுஐப் எம்.காசிம் அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச்…

Read More

இலங்கை மகளிர் கபடி அணிக்கு வெண்கலப்பதக்கம்

ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43ற்கு31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,…

Read More