Headlines

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்




வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிராகவும், சிங்கள மக்களை ஒன்று திரட்டும் முகமாகவும் நாட்டில் மீண்டும் ஓர் பதற்றமான சூழ்நிலையை முன்வைக்கும் முயற்ச்சியாகவும் இது மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியின் மூலம் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சிகளை ஞானசார தேரர் முன்னெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

(TW)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *