Headlines

தகவல் அறியும் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்திட்டார்

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அச்சட்ட மூலத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் நீல் இட்டவெல ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

Read More

பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் ! நபர் கைது

கடந்த சனி நள்ளிரவு பொரலஸ்கமுவ பிரதேச பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை தொடரும் நிலையில் இன்னும் ஒருவர் அல்லது இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதர சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டறிய பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றின் சிசீ டிவி  யை பரீசீலனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மீன் ஏற்றுமதியில் இலங்கை முன்னேற்றம்

மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்ட இரண்டு மாதங்களில் குறித்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அலங்கார மீன் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் 2400 மில்லியன் ரூபா அரசுக்கு  வருமானம்…

Read More

சீனியை தொடர்ந்து உப்பு

சந்தையில் விற்பனைக்குள்ள உணவுப் பொருட்களின் சீனி மற்றும் உப்பின் அளவை குறித்துக் காட்டக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். இதேவேளை, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்து காட்டாதவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

இந்திய விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல்!

இந்திய விமான படைக்கு சொந்தமான மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் திகதி போர்ட் பிளேயருக்கு பயணித்த ஏ.என்.32 என்ற விமானம் காணமல் போனது. குறித்த விமானம் கடல் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியிருகலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த கடல் பகுதியானது, 3,500 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஆழம் இருப்பதால், விமானம் விழுந்த பகுதியைக்…

Read More

நாடாளுமன்றில் இன்று விவாதம்!

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது. 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று (9) நாடாளுமன்றில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

போலி இணையத்தளங்கள் வாயிலாக அமைச்சர் றிஷாத்தை கேவலப்படுத்தியவர்கள் மாட்டிக்கொண்டனர்

IPL சூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட சபான் சிராஜ், அபாம் சபீக் ஆகியோர் குற்றப்புலனாய்வில் வகையாக மாட்டிக்கொண்டனர். சவூதி அரேபியா, ரியாதில் பணிபுரியும் அக்கரைப்பற்று சபான் சிராஜ் என்பவரும், முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பிரிவில் பணியாற்றும், பேருவளையைச் சேர்ந்த அபாம் சபீக் என்பவரும் அமைச்சர் றிசாத்தை வீழ்த்தும் நோக்கில் இவ்வாறான…

Read More

3 வயதில் அல்குர்ஆனை, மனனம்செய்த இரட்டை சகோதரர்கள்!

இந்தேனேசியவில் இடம்பெற்ற மாநாட்டில் மூன்று வயதில் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் அங்கு குர்ஆனை ஓதி காண்பித்தார்கள்.  இந்த இரட்டை சகோதர்ர்களையும் கொளரவித்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Read More

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள்

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தினமும் ஆறு வாய் புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஆயிரத்து 888 ஆண்களும், 534 பெண்களும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிலை, புகையிலை, புகைத்தல் மற்றும் மதுபானம் போன்ற காரணங்களினால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய் புற்றுநோய் தொடர்பான நோய் குணங்குறிகளை அறிந்துகொள்ள தேவையான வசதிகளை சிகிச்சை…

Read More

சிறந்த ஏற்றுமதியாளர் விருது நிகழ்வு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறந்த ஏற்றுமதியாளர் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் திறமையை வௌிப்படுத்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்டர் எஸ் யாப்பா தலைமையில் அமைந்த குழு சிறந்த ஏற்றுமதியாளர்களை தெரிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

வௌிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியில் வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்கள்

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 312 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியில் 302 மில்லியன் டொலர் நிதி செயற்றிட்ட கடன் தொகையாகவும், எஞ்சிய தொகை நேரடி உதவியாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிதியுதவித் தொகையில் பெரும் பகுதி சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 25 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று (8) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்னோ சாலையில் மங்கள் சவுக் அருகில் சென்றபோது அவரது காரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சக வழக்கறிஞர்கள் குவெட்டா…

Read More