Headlines

கிராம உத்தியோகத்தர் தேர்வு போட்டி பரீட்சை அடுத்த மாதம்

கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 858 மத்திய நிலையங்கள் ஊடாக இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதோடு இதில் 109021 பேர் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.என்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்பாக அனுமதியட்டைகள் கிடைக்காதவர்கள் 1911 அல்லது 0112 785230, 0112…

Read More

மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்

பலுசிஸ்தானில் ‘பலூச் தேசிய இயக்கம்’ என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர். மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்கு முறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்நிலையில் பலுசிஸ்தான் பற்றிய மோடியின் பேச்சு எல்லையை மீறயது என்றும் நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது….

Read More

200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார், உசேன் போல்ட்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில்…

Read More

முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு – விசாரிக்குமாறு வலியுறுத்து

இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் மீது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு முன்னிலையில் இந்த கோரிக்கை முஸ்லிம்கள் சார்ந்த சிவில் அமைப்புகளினால் முன் வைக்கப்பட்டுள்ளன. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு நேற்று (18) வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச…

Read More

பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும் -அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – புதிதாக சிந்தித்து பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும். நாம் இன்னும் நமது மூதாதையர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தான் பால் உற்பத்தியை மேற்கொள்கிறோம். அதனால் நமது உற்பத்தியில் முன்னேற்றம் இல்லை. அத்தோடு நமது தொழிலிலும் அபிவிருத்தி இல்லை மாறாக, புதிய வகையில் சிந்தனை செய்து பால் உற்பத்தியை பெருக்கும் வழிவகைகளை பாற்பண்ணையாளர்கள் கண்டறிய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார். வெள்ளாவெளி…

Read More

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; றிஷாத்தின் கோரிக்கையை ஏற்பு!

சுஐப் எம்.காசிம் பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கொழும்பு, பத்தரமுல்லையில் இன்று மாலை (18/08/2016) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. கல்வி அமைச்சருடனான இந்தச் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், கஹடகஹ கிரபைட் நிறுவனத்தின் தலைவருமான முன்னாள் எம்.பி. மஜீத் (எஸ்.எஸ்.பி), சட்டத்தரணி முனாஸ்தீன், உதவிக்கல்விப் பணிப்பாளர்…

Read More

துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து புரட்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 35 ஆயிரம் பேரை விசாரணைக்காக அந்த நாட்டு அரசு கைது செய்தது. இதன் காரணமாக துருக்கி சிறைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இட நெருக்கடியை குறைக்க துருக்கி அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நன்னடத்தையுடன் நடந்து…

Read More

இது அரசாங்கத்தின் தீர்மானம்

சுகாதார அமைச்சுக்கு மற்றுமொரு பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது அரசாங்கத்தின் தீர்மானம் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார். நான்கு அமைச்சுக்களுக்கு இவ்வாறு பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை ஆகிய அமைச்சுக்களுக்கு இவ்வாறு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். அத்துடன் அந்த அமைச்சுக்கள் 100 பில்லியன்களுக்கு அதிகமான செலவுகளை மேற்கொள்வதனால் அதற்காக நிதி மற்றும் கணக்கியல் சம்பந்தமான பணிப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்….

Read More

1000 பஸ்களை திருத்துவதற்கு 3000 மில்லியன் ரூபா

போக்குவரத்துக்கு உதவும் நிலையற்ற ஆயிரம் பஸ்களை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பஸ்களை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Read More

சுதந்திர கட்சி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார்…

Read More

புதிய கட்டளைத் தளபதிக்கு பொலிஸ் மா அதிபர் ஒப்புதல்

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. கடந்த 09ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் பொலிஸ் மா அதிபரினால் அதற்கான அங்கிகாரம் வழங்கப்படாதிருந்து…

Read More

டொனால்ட் ட்ரம்பை விரட்ட வேண்டும் – வில் ஸ்மித்

சமீபத்தில் துபைக்கு சென்றிருந்த பிரபல முன்னனி ஹாலிவுட் நகடிர் வில் ஸ்மித் அவர்கள் இஸ்லாம் குறித்தான டொனால்ட் ட்ரம்ஸ் ன் வெறுக்கத்தக்க பேச்சு குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ”அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்கள் குறித்து நான் வெளிப்படையாக சொல்வது மிகவும் அவசியமானது. டொனால்ட் ட்ரம்ஸ் போன்றவர்களின் பேச்சை கேட்பது மிகவும் மன வேதனைக்குரிய விசயம் ஒரு அமெரிக்கனாக இருப்பதால் இதையெல்லாம் கேட்க வேண்டியது தலையெழுத்து. இப்படிப்பட்டவர்களை விரட்டி அடித்து நாட்டை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்” என வில்…

Read More