Headlines

மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்




பலுசிஸ்தானில் ‘பலூச் தேசிய இயக்கம்’ என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர்.

மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்கு முறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் பலுசிஸ்தான் பற்றிய மோடியின் பேச்சு எல்லையை மீறயது என்றும் நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் எழுப்புவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாபீஸ் ஜகாரியா கூறிஉள்ளார்.

“மோடி ஐ.நா.வின் வரைமுறையை மீறியுள்ளார், பலுசிஸ்தான் குறித்து பேசி எல்லையை மீறிவிட்டார். ஏற்கனவே நாங்கள் காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் குரல் எழுப்பினோம். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பிரதமர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவார்,” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *