Headlines

அரச அச்சகர் காமினி பொன்சேகா இராஜினாமா

அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் காமினி பொன்சேகா தனது பதவியை இன்று (20)  இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தினை  ஊடக அமைச்சின்  செயலாளர் நிமால் பொபகேவிடம் இன்று காலை கையளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவருக்கு எதிராக  பல தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களே இவரது இராஜினாமாவிற்கு காரணமென அரச அச்சுத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

எஸ்.பி.க்கு எதிராக முறைப்பாடு

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக இன்று (20) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியனவே மேற்படி முறைப்பாடுகளை செய்துள்ளது. எஸ்.பி. திஸாநாயக்க ஊக்குவிப்பு நீதியில் முறைக்கேடுகள் செய்துள்ளதாகவே குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில், யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம்…

Read More

රජයේ මුද්‍රණායාලාධිපති අද ඉල්ලා අස්වේ

– නිලුපුලී – අද දින එනම් (ජූනි 20) රජයේ ද්‍රණායාලාධිපති වශයෙන් කටයුතු කරන  ගාමිණී ෆොන්සේකා මහතා සිය ධුරයෙන් ඉල්ලා අස්වී ඇත. පෞද්ගලික හේතුවක් මත එම ධුරයෙන් ඉල්ලා අස්වූ බව පවසා ඔහු සිය ඉල්ලා අස්වීමේ ලිපිය ජනමාධ්‍ය අමාත්‍යාංශයේ ලේකම් නිමල් බෝපගේ වෙත අද දිනයේ භාරදී ඇති බව පැවසේ.

Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் : விரைவில் நீதிமன்றத்திற்கு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டே குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு…

Read More

වසා දමා ඇති ඇඹිලිපිටිය කඩදාසි කම්හල යළි ගොඩනගනවා – ජනපති කියයි

– නිලුපුලී – දේශීය කර්මාන්ත ශාලා විශාල වශයෙන් ඇදවැටීමකට ලක්ව තිබූ පසුගිය සමයේ කර්මාන්ත ශාලා500 ක් පමණ වැසී ගිය බැවින් එම කර්මාන්ත ශාලා යළි ගොඩනගා එම විෂයෙහි පුනර්ජීවයක් ඇති කිරීමෙහිලා  ප්‍රවිෂ්ටයක් ලෙස වසා  දමා ඇති ඇඹිලිපිටිය කඩදාසි කම්හල ජාතික සම්පතක් වශයෙන් යළි ගොඩනංවන බව ජනාධිපතිවරයා විසින්  ඇඹිලිපිටිය ශී‍්‍ර බෝධිරාජ ධර්මායතනයේ අභිනවයෙන් ඉදිකරන ලද ශී‍්‍ර සර්වඥ ධාතු…

Read More

3 பதில் பொலிஸ் மா அதிபரை கோறும் பூஜித

மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே, குறித்த பதவிக்கு ஏற்கனவே 12 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை(23) இடம்பெறவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் சந்திப்பின் போது பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

Read More

மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்- நிமால் ஸ்ரீபால

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என சிவில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனது சட்டதரணி தொழிலையே செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஜே.வி.பி ஒன்றுபடவேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் இடதுசாரி அரசியலில் சர்வதேசவாதம் மற்றும் தேசியவாதம் என்ற இரண்டு கொள்கைகளை கொண்டிருந்ததாக தேரர் குறிப்பிட்டார். இந்த நிலையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ள…

Read More

2 மாதங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

சிறிலங்காவில் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு, வரும், செவ்வாயன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர்  சரத் குமார தெரிவித்தார். புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும்  உள்ளடக்கிய உயிரியல் தகவல்கள் மற்றும் ஒளிப்படம் அடங்கிய இலத்திரனியல் அட்டை ஒன்று இருக்கும். 65 வயது வரை, ஒவ்வொரு பத்து…

Read More

தம்மாலோக்க தேரருக்கு பிணை

உடுவே தம்மாலோக்க தேரரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக பராமரித்து வந்தமை தொடர்பில் தேரர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ධම්මාලෝක හිමියන්ට අධි චෝදනා සහ ඇප

– නිලුපුලී – උඩුවේ ධම්මාලෝක හිමියන්ට  එරෙහිව නීතිපතිවරයා විසින් අද දින එනම් (ජූනි 20 ) කොළඹ මහාධිකරණයට බලපත්‍රයක් නොමැතිව අලි පැටවෙකු ළග තබා ගැනිම  සම්බන්ධයෙන් අධි චෝදනා පත්‍ර භාර දෙනු ලැබීය. ඒ අනුව  උන්වහන්සේට රුපියල් ලක්ෂ සීයක ශරීර ඇප දෙකක් මත ඇප ලබා දීමට  කොළඹ මහාධිකරණය නියෝග කර ඇත .

Read More