Headlines

சிறைச்சாலை உணவை நிராகரித்தார் கம்மன்பில

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சிறைச்சாலை உணவு வகைகளை நிராகரித்துள்ளார். நேற்று (20) முதல் வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொண்டு உட்கொண்டு வருகின்றார். கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உதய கம்மன்பில தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆவண மோசடி செய்து சொத்துக்களை அபகரித்துக்கொண்டதாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி முதல் நேற்று முற்பகல் வரையில் சிறைச்சாலை உணவை உதய கம்மன்பில உட்கொண்டார். எனினும், தொடர்ந்தும் சிறைச்சாலை…

Read More

அரசியல்வாதிகளை உலமா சபை வழிநடத்த வேண்டும் – நவவி

புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளை புத்தளம் பெரியபள்ளி மற்றும் உலமா சபை என்பன வழிநடத்த வேண்டும்” என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இயங்கிவரும் விஞ்ஞானக் கல்லூரியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “கல்வி விடயத்தில் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும். எந்தக் கட்சியாக…

Read More

செல்பி எடுத்தால் தோல் பாதிப்பு ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செல்போனில் ‘செல்பி’ எடுப்பது தற்போது ‘பே‌ஷன்’ ஆகிவிட்டது. சிலர் ‘செல்பி’ எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடிக்கடி ‘செல்பி’ எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செல்பி எடுக்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும்….

Read More

இறைவனால் அருளப்பட்ட சட்டங்களையே கடைப்பிடிக்கின்றோம் – சவூதி

ங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதையும் கிடையாது என்று அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான நீதி அமைச்சர் ‘முஹம்மது அல் ஈசா’ எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான திருக்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம் என கூறியுள்ளார். முஹம்மத் அல் ஈஸா மேலும் கூறுகையில், எமது நாட்டின்…

Read More

புனித றமழான் விசேட அறிவியல் போட்டி-2016

காத்தான்குடி அல்மனார் நிறுவனம் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டிக்கான வினாக்கொத்துகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்புனித மாதத்தில் குர்ஆன், ஹதீதுகளுடன் தொடர்புபட்ட ஒரு சமூக குழாமொன்றை உருவாக்கி அதன் பலனை அவர்களது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழும் உயரிய பணி இதனூடாக கட்டியெழுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நோன்பு காலங்களில் மார்க்க அறிவினை விருத்தி செய்யும் நந்நோக்கில் இவ்வினாக்கொத்து தற்போது வெளியாக்கப்பட்டுள்ளது….

Read More

பஸ் கட்டணங்கள் அதிகரிக்க தீர்மானம்

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்கள் 3.2 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்று இன்று (20) இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே குறித்த கட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல்

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

குடியிருப்பாளர்களுக்கான புதிய வீடுகளுக்கான அடிக்கல்!

அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்தில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பொருட்டு வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டும் வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. இவ் அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நாட்டி வைத்தார். இவ் வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், ஆர். ராஜாராம், என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

அனர்த்த பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!

எதிர்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீண்டகால வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்துக்கு கடந்த 18 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் உறுதியளித்தார். அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாத வகையிலும்,…

Read More

வெலிக்கடை சிறைச்சாலைக்கு படையெடுக்கும் கூட்டு எதிரணியின் எம்.பிக்கள்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். அவர்ளுடன், பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…

Read More

ஞானசார தேரர், சிறைச்சாலைக்கு சென்றார்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான  உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் (20) தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…

Read More

விரைவில்… பொலிஸாருக்கான புதிய ஒழுக்க விதி கோவை

பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய ஒழுக்க விதி கோவையை தயாரிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். பொலிஸார் பொதுமக்களுடனான சுமூகமான உறவை பேணுவதற்காகவும் மக்களுடன் இணைந்து செயற்படும்போது பொலிஸார் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கி குறித்த ஒழுக்க விதிக் கோவை தயார் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More