Headlines

மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீக்கிரை!

அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (19)  இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அவிஸ்ஸாவெல பொலிஸாரும்,பிரதேசவாசிகளும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்றும்,ஆனால் வீட்டிலிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மர் காயம்

யக்கல, அளுத்கமப் பகுதியில் பஸ்ஸும் வானும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த வானும், கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாணசபை அமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்கவுள்ளார். மேலும், இந்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக அனைத்து மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படவுள்ளதோடு, மேதினத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்

– சுஐப் எம்.காசிம் –  முல்லைத்தீவு மக்களை நாம் ஒருபோதும் மறவோம்.  எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா குருமண்காட்டில் முல்லைத்தீவு மக்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர் கூறியதாவது, நான் மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்தபோதும், வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் வவுனியா, முல்லைத்தீவு மக்களுக்கும் பணிபுரிய கடமைப்பட்டவன். அந்த மாவட்ட மக்களுக்கும் நான்…

Read More

சிசிலியாவுக்கு மீண்டும் விளக்கமறியலில்!

லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலையின் பிணை மனுமீதான தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செலிங்கோ குழும நிதிமோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிசிலியா நேற்று (19) கொழும்பு கோட்டை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, அவர் லண்டன் மற்றும் வேறு பல இடங்களில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதற்கான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிசிலியாவின் வழக்கறிஞர்கள் அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தனர். எனினும், பிணை…

Read More

ஜீன்ஸ் ஆடை அணிவதற்கு தடை.!

வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மேற்குலக கலாசாரம் நாட்டில் பரவுவதை தடுக்க ஜீன்ஸ் ஆடைகளை அணிவதற்கும் முகத்தில் அலங்காரமாக துளையிடுவதற்கும் தடை விதித்துள்ளார். மேற்படி நாடளாவிய தடைகளானது சீனாவுக்கு அண்மையிலுள்ள யங்காங் மாகாணம் மற்றும் வட ஹம்கையொங் மாகாணம் என்பவற்றை இலக்கு வைத்து விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வட கொரிய தொழிலாளர்கள் கட்சியின் 7 ஆவது கூட்டத்தையொட்டியே விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஆசிய பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 03ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும்,பிரசாந்தனுக்கு பிணை வழங்கக் கோரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 28ம் திகதி குறித்த வழக்கு…

Read More

மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

Read More

களனிவெளி பாதையில் ரயில் தடம்புரண்டது

களனிவெளி பாதையில், அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயில், கொஸ்கம-மிரிஸ்வத்த எனுமிடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளது. பெட்டியொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என்றும் இதனால் 20-30 சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை, தண்டவாளத்தில் நிறுத்தும் வரையிலும் அப்பாதையின் ஊடாக ரயில்சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அக்கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Read More

லக்கல ஆயுத திருட்டின் பின்னணி என்ன?

லக்கல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி திருட்டு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் சட்டவிரோத இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல் தொடர்புடைய கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதற்கமைய துப்பாக்கிகளை திருடிய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

இலங்கை வரும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வொல்ட்ஸ்ரோம் யாழ். குடாநாட்டிற்கும் செல்லவுள்ளார்.சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து சுவிஸ் அமைச்சர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மறவன்புலோவில் சுவிஸ் நாட்டின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடுவதற்காக சுவிஸ் அமைச்சர் எதிர்வரும் 26ஆம் திகதி…

Read More

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஒருநாள் வேலைத்திட்டம்!

உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய வேலைத்திட்டங்களை சவாலாகக் கொண்டு ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் நாளை காலை 8 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் பிரதி செயலாளர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் உள்ளிட்டோர்…

Read More