Headlines

அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஒருநாள் வேலைத்திட்டம்!




உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய வேலைத்திட்டங்களை சவாலாகக் கொண்டு ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் நாளை காலை 8 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் பிரதி செயலாளர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *