Headlines

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்குவதாகவும் மற்றும் சீன நிறுவனம்  உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும், கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படும் காணிகளுக்கு சந்தை பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Read More

‘தேஜாஸ்’ மீது இலங்கை கவனம்

இந்திய தயாரிப்பான ‘தேஜாஸ்’ என்ற இலகுரக போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாகிஸ்தான் உற்பத்தியான JF-17  ரக போர் விமானத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை முன்னர் அவதானம் செலுத்திய போதும் பின்னர், அது கைவிடப்பட்டு, தற்போது இலங்கையின் கவனம் தேஜாஸ் மீது திரும்பியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இதேவேளை, தேஜாஸ் விமானம் தொடர்பில் பல நாடுகளும் தற்போது அவதானம் செலுத்திவருவதாகவும் இந்திய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சைபர் தாக்குதல்: இலங்கையர்கள் எண்மர் அடையாளம்

பங்களாதேஸின் மத்திய வங்கியின் ஊடாக சைபர் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 20 வெளிநாட்டவர்கள் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் 8 பேர் இலங்கையர்கள் எனவும் 12 பேர் பிலிப்பினியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

குளியாப்பிடியாவில் 3 கைக்குண்டு மீட்பு.!

குளியாப்பிடிய – ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய விகாரை சந்தியில் இன்று காலை 3 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குளியாபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு நீதவானின் அறிவுரையின் கீழ் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

எருக்கலம்பிட்டி: பழைய மாணவர்களின் ஒன்று கூடல்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் நாங்கள் மீண்டும் எழுவோம் எனும் தொணிப் பொருளிலான ஒன்று கூடல் ஒன்றினை கல்லூரியின் அதிபர் மற்றும் பழையமாணவர்களின் சங்கமும் இணைந்து எதிர் வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள பி அறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கௌரவ அதிதியாக வடமாகாண சபை ஆளுநர்…

Read More

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார். நாட்டின் அதிகூடிய வெப்பநிலையான 38.9 பாகை (செல்சியஸ்) வவுனியாவிலும் அதற்கடுத்து பொலநறுவையில் 36.9 பாகையும், குருநாகல் மற்றும்…

Read More

பல்கலை புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இம்முறை வழங்கப்படவுள்ள கையேடானது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான விடயங்கள் நாளை முதல் பத்திரிகைகள் ஊடாக விளப்பரப்படுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு…

Read More

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது. சூழல் பாது­காப்பு தொடர்பில் இடம்­பெ­ற­வுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான விஜயம் மேற்­கொண்டு 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு பய­­ண­மா­க­வி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் செல­வீ­னங்­களை குறைப்­ப­தற்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்­கான விஜ­யங்­களை குறைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ஏற்­க­னவே அறி­வித்­திருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது. எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி…

Read More

மஹிந்தவை மத்திய குழு கட்டுப்படுத்த முடியாது.!

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் மத்­திய குழு எடுக்கும் தீர்­மா­னங்கள் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. எனினும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாவார். எனவே ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­து­வது போன்று அவரை வழிநடத்த முடி­யாது. அவரை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவ­ரது விடயத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரத்­தி­யே­க­மான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று (18) காலை…

Read More

வழிதவறிய யாத்ரீகர்கள்!

– க.கிஷாந்தன் – சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 200 பேர் வழிதவறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தாண்டின் பின்னரான காலப் பகுதியில் மாத்திரம் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். ஹட்டன் வழியாக மலை ஏறியவர்கள் வழி தவறி இரத்தினபுரி வழியாக இறங்கிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளது. இவ்வாறு வழி தவறியவர்களில் அதிகளவான சிறுவர்களும் முதியவர்களும் அடங்கியுள்ளனர். அதிக சன நெரிசல் காரணமாகவே இவர்கள்…

Read More

பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை.!

இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். என்.கே. இலங்கக்கோன் கடந்த 12 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தரவின் பெயரினை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.

Read More

பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்

பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார். வரி சலுகையை பெற்றுக் கொள்வதில்…

Read More