Headlines

மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீக்கிரை!




அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (19)  இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அவிஸ்ஸாவெல பொலிஸாரும்,பிரதேசவாசிகளும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்றும்,ஆனால் வீட்டிலிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *