Headlines

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலஞ்சென்ற அஸ்கிரி பீட மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றை கோரியிருந்தார். விடயங்களை பரிசீலனை செய்து பார்த்த கொழும்பு நீதவான்…

Read More

மருந்து முன்னேற்றம் குறித்து ஆராய குழு நியமிப்பு

நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து விநியோக பிரிவு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் குறித்த குழுவில்…

Read More

சதொசவில் ஊழல் நடைபெற்றதாக கூறுப்படுவது அப்பட்டமான பொய் – டாக்டர் ரொஹாந்த

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்ற போது ரூபா 15 கோடி நஷ்டத்தில் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் தொழிற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக KPMG நிறுவனம் பணிக்கமர்த்தப்பட்டது. அந்த நிறுவனம்…

Read More

கெகிராவை வாகன விபத்தில் 9 வயது சிறுவன் பலி

கெகிராவ பல்லேவெதியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகன விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறியரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் குறித்த வாகனங்களின் சாரதிகள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

அர் – றஹ்மா நலன்புரி சங்கத்தினால், சீருடை வழங்கும் நிகழ்வு

– மௌலவி முஹம்மட் றிஸ்வி (அல்-அஷ்ஹரி) – பொலன்னறுவை மாவட்டத்தில் கதுருவெல குசும்கம எனும் பிரதேசத்தில் பொது நோக்காக சுமார் 2 மாதமாக தமது பொதுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அர்-றஹ்மா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு செயற்பாடாக தமது ஊரிலுள்ள இளம் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக்கொடுக்கும் குர்ஆன் (மக்தப்) மதரசாவிற்கான அனைத்து குறைகளையும் தங்களால் முடியுமான வரை நிறைவு செய்து இலவசமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பிள்ளைகளுக்கு சீருடை வழங்கும்…

Read More

“குளுகோமாவை தோற்கடிப்போம்”

உலக குளுகோமா வாரத்தை முன்னிட்டு ”குளுகோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாதயாத்திரை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது.   கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இப்பாதயாத்திரை விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி தேசிய கண் வைத்தியசாலை வரை இடம்பெற்றது. A walk organized to mark the World Glaucoma Week under the theme “Beat Invisible Glaucoma” held under the patronage of President Maithripala…

Read More

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) காலை முன்னிலையானார். அது , ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 8.45 மணியளவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணையத்திற்கு வந்ததாக அதன் பேச்சாளர் ஒருவர்   தெரிவித்திருந்தார்.

Read More

ஸக்காத் அமைப்புக்களுடனான சந்திப்பும், தகவல் திரட்டலும்

தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு நடாத்திய ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கூட்டு ஸகாத் நிதிகளின் முறையான விநியோகம் பிரதான பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இலங்கையில் பிராந்திய, பள்ளிவாசல் (கிராம) மட்டங்களில் ஸகாத் நிதிகளை  சேகரித்து அவற்றின்  மூலம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகள், பள்ளிவாசல் ஸக்காத் அமைப்புக்களுடான சந்திப்பொன்றை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரதும் அனுபவங்களைப் பரிமாறி இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்ககான வழிமுறைகளைக் கண்டறிய இவ்வுபகுழு உத்தேசித்துள்ளது. இச்சந்திப்பிற்கு நாடாளாவிய…

Read More

ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலணி

கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து நியாயம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராக பணியாற்றி அநீதிகள், துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ்விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட…

Read More

ஆங்சான் சூகி மியான்மர் அதிபராக மாட்டார்

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேல் சபை, கீழ் சபை மற்றும் ராணுவம் மூன்றும் தன்னுடைய தரப்பிற்கு ஒரு அதிபர் வேட்பாளரை மார்ச் 17-ம் தேதிக்கு முன்பாக தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மார்ச் 17-அன்று பாராளுமன்றத்தில் அந்த பெயர்களை தாக்கல் செய்யப்படும். பின்னர் 664…

Read More

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த…

Read More

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குற்றங்களை ஒப்புக்கொண்டார். அத்துடன், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று (11), கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார்.

Read More