Headlines

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரின் பாரியார் காலமானார்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசி தனது 83 ஆவது அகவையில் இலண்டனில் காலமானார். இலண்டனில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்த அவர் நேற்று (9) திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இன்று இயற்கை எய்தினார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியலுக்கு துணையாக நின்று செயற்பட்ட மங்கையற்கரசி, அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திலும், பின்னர் இலண்டனிலும் வசித்து…

Read More

மார்ச் 13, துக்க தினமாக பிரகடனம்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமான, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

Read More

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரது இறுதிக்கிரியை ஞாயிறன்று

காலமான அத்ததஸ்ஸி தேரரது இறுதி கிரியை 13 ஆம் திகதி கண்டி கவற்துறை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று (10) காலை ஒன்று கூடிய தேரர் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தம்மாநந்த தேரர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More

பாதாள உலகக்கும்பலை ஒழிப்பது பொலிஸாரின் கடமை

பாதாள உலகக்கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பது பொலிஸாரின் கடமை. இதற்கு ஜனாதிபதியின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (9) இடம்பெற்ற ‘அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படு’ அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில்  பெரும் கொள்ளைகள்  இடம்பெற்றன. தற்போது, அதுபோன்றதொரு கொள்ளை இலங்கை…

Read More

“கூட்டு எதிர்க்கட்சியில் பங்கேற்க SLFP க்கு அனுமதி கிடையாது”

கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றையும் கூட்டமொன்றையும் நடாத்த உள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே துமிந்த திஸ்ஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த கூட்டத்திலும்…

Read More

யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும்  மார்ச் மாதம் 24ஆம் திகதி…

Read More

மகாநாயக்க தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் றிஷாத்

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலு கூறப்பட்டுள்ளதாவது; மறைந்த தேரர் இனங்களுக்குகிடையில் நல்லுறவை உருவாக்குவதில் பெரிதும் பாடுபட்டவர். பல்வேறு பட்ட கொள்கைகளையுடைய அரசியல்வாதிகள் இவரிடம் சென்று ஆசி பெறும்போது இன ஐக்கியத்தின் அவசியத்தை அவர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவதோடு நாட்டில் சமாதானம் நிலைக்க அனைவரும் பாடுபடவேண்டுமெனவும் அவர்களிடம் சுட்டிக்காட்டுவார். அதிகாரத்திலுள்ளவர்கள் தவறிழைக்கும் போதும்…

Read More

வடகொரியாவுக்கு ஆதரவு இல்லை – சீனா திட்டவட்டம்

வட­கொ­ரி­யாவின் அணு ஆயுத மற்றும் ஏவு­கணைத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கப் போவ­தில்­லை­யென சீனா தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து சீன வெளி­யு­றவுத் துறை அமைச்சர் வாங் யி  நேற்று முன்­தினம் (8) தெரி­வித்­துள்­ள­தா­வது, நாட்டு வளர்ச்­சி­யையும், பாது­காப்­பையும் மேம்­ப­டுத்த வட­கொ­ரியா விரும்­பினால் அவர்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க நாங்கள் தயா­ராக இருக்­கிறோம். இருந்தும், கொரிய தீப­கற்பம் அணு ஆயுத ஆபத்­தில்­லாத பகு­தி­யாக விளங்க வேண்டும் என்­ப­தற்கு நாங்கள் மிகுந்த முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கிறோம். எனவே, வட­கொ­ரி­யாவின் அணு ஆயுதத் திட்­டங்­க­ளுக்கோ, அந்த ஆயு­தங்­களை…

Read More

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நவீன ரக சி.ரி. ஸ்கேனரை பெற்றுக் கொள்வதற்கு உதவி கோரல்

– அஷ்ரப் ஏ சமத், சத்தார் எம் ஜாவித் – மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்­க­வ­தற்கு இன, மத பேத­மின்றி ஒன்­றி­ணைந்து உத­வு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சுமார் 1,100 பேர் தங்கி சிகிச்சை பெறு­வ­தா­கவும், அத­னை­விட நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சிகிச்­சை­களை பெற்றுச் செல்­வ­தற்­காக வருகை தரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை, இலங்­கையில் சுமார் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் இந்த நோயினால்…

Read More

சுமித்தின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது

பிரேத பரிசோதனைக்காக இன்று (10) தோண்டப்படுவதாக அறிவித்த எம்பிலிப்பிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் குறித்த சடலத்தை தோண்டுமாறு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சடலத்தை பரிசோதனை செய்யும் சட்டமருத்துவர் தன்னால் இன்று வரமுடியாது என்று அறிவித்தமையினால் இந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…

Read More

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரண்டு விருதுகள்!

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 1995ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற…

Read More