இனி பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்!
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…
புதிய சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (10) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஆதிவாசி மக்கள் சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட தாக்கங்களுக்கு பாரியளவில் உள்ளாகியிருப்பதாக ஆசிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு அவர்களுக்கு விசேட நிபுணத்துவ மருத்துவ சிகிச்சைகள் அவசியம் என சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிவாசித் தலைவர் கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ள நிலையில். இதன்படி எதிர்காலத்தில் மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, நோய் தாக்கங்களில் இருந்து விடுபடும் வகையில் ஆதிவாசிகளுக்கு பாரம்பரிய முறையில் வாழ்வதற்கான உரிமையையும், சூழ்நிலையையும் ஏற்படுத்திக்…
இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒது க்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்வைத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரஸுக்கு அனுப்பிவைத்துள்ள வரவு – செலவுத்திட்ட யோசனையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களுக்கு பின்னர் இலங்கைக்கான அமெரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாக அந்த…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் ஆதரவு எமக்கு பெரும் துணையாக அமையும் என ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜேர்மனிய அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில்…
பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குனர் வின்சென்ட் ஸ்டீவார்ட், அந்த நாட்டின் செனட் சபை ஆயுத பணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனது அணு ஆயுத பாதுகாப்பை பாகிஸ்தான் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது அணு ஆயுத குவிப்பு நடவடிக்கைகளுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து இருக்கிறது” என்றார். மேலும் அவர், “பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தொடர்ந்து அதிகரித்து…
கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் பனி மூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இங்கு தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரை இறக்கப்ப்ட்டது.
யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர் ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை அனுப்பியுள்ளனர். அந்த கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,ஜனவரி 31 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச உட்பட சிலர் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த உள்ளிட்ட கைதிகளை சந்தித்து பேசிவிட்டு திரும்பிச் சென்றனர். இவர்களை சந்தித்து பேசி பின்னர், யோஷித்த ராஜபக்ச இரும்பு கதவை திறந்து கொண்டு தான்…
கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் இது குறித்து கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரின் போது தீர்வு வழங்கப்படும். கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கை குறித்து சபாநயாகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்…
எம்பிலிபிட்டியில் அண்மையில் இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளில் தாம் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் எம்பிலிபிட்டியில் பொலிஸாருக்கும் பிரதேசத்தில் விருந்துபசாரமொன்றை நடத்திக்கொண்டிருந்த கும்பலுக்கும் இடையிலான மோதலில் சுமித் பிரசன்ன என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்திருந்தார். விசாரணைகளில் தலையீடு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம்…