Headlines

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார்.
குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன.
இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *