ஐ.எஸ் களைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை பயங்காட்ட முயற்சி
வடக்கில் புலிகளைக் காட்டி தெற்கிலுள்ளவர்களை தூண்டிவிடுவதற்கும், வெளிநாட்டிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை அச்சமூட்ட முனைவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். “சலகுன” எனும் தனியார் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். இந்த நாட்டை சமஸ்டியாக மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். வடக்கிலுள்ள தமிழர்கள் தெற்கிலுள்ள சிங்களவர்களை ஒதுக்கி தனியாக பிரிந்து நின்று வாழ்வதற்கு…
