Headlines

சவூதி பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி

சவூதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதியின் உள்துறை…

Read More

உலகப்போர் மூளும்: ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். களின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, வான்வழி தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி…

Read More

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குவைட் பயணம்

கொழும்பு மாவட்ட மாவட்ட அபிவித்தி குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார். இந்த விஜயத்தின்போது குவைட் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கள் நடவடிக்கைகள்…

Read More

இன்று மஹிந்த புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில்  கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இரத்தினபுரி, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு 17 வருடமாக  இடம்பெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

70 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான 70 வகை அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மருந்துப்பொருள் இறக்குமதி செய்வதற்கு விலைமனுக் கோரல்கள் உரிய நேரத்தில் அனுப்பி…

Read More

குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட பின்­னரே யோஷித கைது செய்­யப்­பட்­டுள்ளார்

ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களை கைது செய்­யவே மக்கள் எமக்கு இரு­முறை ஆணை வழங்­கி­னார்கள். கடந்த ஒரு­வ­ருட கால­மாக நிதி மோசடி விசா­ரணை பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் யோஷித ராஜபக் ஷ குற்­ற­வா­ளி­யாக இனம்­கா­ணப்­பட்ட பின்­னரே அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். தோப்­பூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்­பாக கருத்­து­வெ­ளி­யிடும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய…

Read More

நகரப்புற சிறைச்சாலைகளை கிராமங்களுக்கு மாற்ற நடவடிக்கை

நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்…

Read More

ஸிகா வைரஸ் தொடர்பில் விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்

ஸிகா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார தரப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான விசேட நிபுணர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். பிரேஸில் உள்ளிட்ட அதன் அயல் நாடுகளில் ஸிகா வைரஸ் வேகமாக பரவியிருந்ததாக  சுட்டிக்காட்டிய அவர், ஆயினும் இலங்கையில் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தொற்றுநோய்…

Read More

சுதந்திரக்கட்சியின் விசேட செயற்குழுக்கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவின் விசேட கூட்டம் இன்று (12) நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இன்று பிற்­பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார். நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள், கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக இந்த கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட உள்­ளது. மேலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பிலும் மத்­திய செயற்­குழு இந்த கூட்­டத்தில் இறுதி முடிவை…

Read More

மரண அச்சுறுத்தல் குறித்து நான் அஞ்சப் போவதில்லை : சபாநாயகர்

– ப.பன்னீர்செல்வம்  – ஆர்.ராம் –  எனது  அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ  அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன்.  எனவே  எனக்கெதிராக மரண அச்சுறுத்தல் தொடர்பில்  நான் அஞ்சப் போவதில்லையென  சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் தெரிவித்தார். ஜே.வி.பி. தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக்  கிளப்பினார். இதில் சபாநாயகருக்கு (உங்களுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று நீங்கள் நேற்று புதன்கிழமை சபையில் வெளிப்படுத்திய…

Read More

வடகொரியாவிற்கு இலங்கை கண்டனம்

நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் வடகொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த கண்டனம் குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரியதீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் திகதி வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனையை அடுத்து, பல உலக நாடுகள் அதனை கண்டித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபை,…

Read More