Headlines

மருத்துவ உதவி கோரும் ஆதிவாசிகள்




ஆதிவாசி மக்கள் சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட தாக்கங்களுக்கு பாரியளவில் உள்ளாகியிருப்பதாக ஆசிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு அவர்களுக்கு விசேட நிபுணத்துவ மருத்துவ சிகிச்சைகள் அவசியம் என சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிவாசித் தலைவர் கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ள நிலையில். இதன்படி எதிர்காலத்தில் மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, நோய் தாக்கங்களில் இருந்து விடுபடும் வகையில் ஆதிவாசிகளுக்கு பாரம்பரிய முறையில் வாழ்வதற்கான உரிமையையும், சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஆதி வாசித் தலைவர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *