Headlines

இலங்கை வந்தடைந்தார் ஹியூகோ ஸ்வையர்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் இன்று (14) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவர் எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு  வருகை தந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

Read More

புதிய அரசியலமைப்பு :பாராளுமன்றில் விவாதம் ;09 திருத்தங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனையின் கீழ் பிரதமா் பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள் கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது. அதனை அவா் ஏற்றுள்ளாா். பாராளுமன்றத்தின் இவை விவாதிக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரவோ தமது ஆலோசனையை சமா்ப்பிப்பதற்கு கடசிகள் தேவை இல்லை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தனித்தனியாக சமா்ப்பிக்க முடியும். இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா். நேற்று…

Read More

57 வருட ஒலிபரப்புச் சேவையை பாராட்டி கௌரவிப்பு

ஒலிபரப்புத்துறையில் 57 வருடம் பணியாற்றிய பிரபல தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்தி ஆசிரியா் திரு. எஸ்.நடராஜ ஐயாின் சேவையை பராட்டி இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவின் செய்தி கொளரவித்தனா் படத்தில் தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா் யு. எல். யாக்ஹூப், எஸ் நடராஜா ஐயருக்கு பொன்னாடை போற்றியும் நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் செய்திப்பிரிவின் தயாரிப்பாளா் மற்றும் செய்தி ஒலிபரப்பாளா்களும் கலந்து கொண்டனா்.

Read More

அமைச்சரவையில் கொதித்தெழுந்த அமைச்சர் றிஷாத்

ஈராக் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தை மூடி விட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் கொண்டு வந்த தீர்மானம், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதுயுதீனின் பலத்த எதிர்ப்பு காரணமாக இன்று கைவிடப்பட்டது. போர்க்கால நெருக்கடியினால் ஈராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்தத் தூதரகத்தை மூடுவதற்கான தீர்மானத்தை அமைச்சர் மங்கள கொண்டுவந்த போது அமைச்சர் றிசாத் ஆவேசத்துடன் குறுக்கிட்டு, இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டிருந்தால், இங்கு…

Read More

பாராளுமன்றத்தில் ஒபாமா ஆற்றிய கடைசி உரை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் நிறைவு அடைய உள்ளது. அங்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஒபாமா நேற்று கடைசி முறையாக பேசினார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த உரையின்போது அவர் கூறியதாவது:- போர்கள், பொருளாதார மந்தநிலை, குடியேறிகள் வருகை, நியாயமான ஒப்பந்தம் வேண்டி தொழிலாளர்கள் போராட்டம், மனித உரிமை போராட்டங்கள் என அமெரிக்கா தொடர்ந்து பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது….

Read More

அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கடிதம் கொண்டு வந்த புறாக்கள்

அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன. பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுதாரபுரம் டி.எஸ். சேனாநாயக்க ஆரம்ப கல்லூரியில், கடிதப் பரிமாற்றத்திற்கு பறவைகளைப் பயன்படுத்தியமை தொடர்பிலான நிகழ்ச்சியொன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் மாணவியருக்கு பறவைகளை கொண்டு கடிதப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது. 12 பறவைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை…

Read More

உங்கள் பிள்ளைகளை பாடசாலையில், அனுமதிக்க பணம் கேட்கிறார்களா..?

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில்,  எந்தவொரு பெற்றோரும் 0112458058 – (call us) என்றத் தொலைபேசி…

Read More

10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாத நேபாளத்தின் கடைசி மன்னர்

நேபாளத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என மின்ஆணையம் தெரிவித்துள்ளது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த பெரும் போராட்டத்தின் விளைவாக அங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜனநாயக அரசு பொறுப்பேற்றுள்ளது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததாக பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து மன்னராக இருந்த ஞானேந்திர ஷா, காத்மாண்டுவில் உள்ள நாராயண் ஹித்தி அரண்மனையை காலி செய்து வெளியேறினார். பின்னர் அரச சொத்தான நாகார்ஜுன அரண்மனையில் வசித்து…

Read More

இந்தோனேஷியாவில் முதன் முறையாய் பாரிய குண்டு வெடிப்பு (படங்கள்)

முதன் முதலாக இந்தோனேஷியா தலைநகரான ஜகார்தாவில் சற்றுமுன்னர் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுமார் 6 குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் பதற்ற நிலையில் காணப் படுகின்றனர்.

Read More

சேயா வழக்கு: 25 முதல் தொடர் விசாரணை

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்துவயது சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலை தொடர்பான வழக்கை ஜனவரி 25ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜனாகி ராஜரத்ன உத்தரவிட்டார். இந்த வழக்கு, சமத் ஜயலனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

அமெரிக்காவை தாக்குவோம்: வடகொரிய அதிபர் அதிரடி

வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறிய வகையில் கடந்தவாரம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது. அந்நாட்டின் இந்த அத்துமீறலானது அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை அந்நாட்டின்மீது விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் சம்பாதித்துள்ள நிலையில் வடகொரியா…

Read More

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இன்று (13) காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 80 பெண்களே இவ்வாறு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால், மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர…

Read More