Headlines

மன்னார் தனியார் நண்டு வளர்ப்பு நிலையத்தைப் பார்வையிட்ட மஹிந்த அமரவீர

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நண்டு வளர்ப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நண்டுகளை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பார்வையிட்டார். மன்னார் மாவட்டத்தில் நண்டு வளர்ப்பினை ஊக்கப்படுத்த உதவிகள் எவையும் அற்ற நிலையில் தனியார் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த நண்டுகள் வளர்க்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான…

Read More

பெண்களை ஆண்களாக மாற்றிவிடும் பீட்ஸா பெட்டிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான ரசாயனப்பூச்சு அட்டைப்பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்பெட்டிக்குள் பெண் நத்தைகளை அடைத்துவைத்து பரிசோதித்ததில் அந்த நத்தைகளுக்கு மெல்ல,மெல்ல ஆணுறுப்புகள் வளர்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வகையில், வெளியேறும் அந்த ரசாயனம்…

Read More

சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை

தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஏதிர்வரும் தினங்களில் இந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திர காந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம்; திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து

போரின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்தை இலங்கை நேற்று(12) கைச்சாத்திட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் 122 நாடுகள் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் குறித்த பிரகடனத்தை நேற்று 155 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் வன்முறைகளை தடுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று…

Read More

ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ.டி 5 மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படங்களுடன் கூடிய 4 ஆயிரம் ஒளிநாடாக்களை அலரிமாளிகையிலிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தியமை தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட மீது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 9ம் திகதி ஆகும் போது இந்த ஒளிநாடாக்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக…

Read More

பௌத்த பிக்குகள் ஜோதிடம் பார்க்கத் தடை

இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும், அது தொடர்பிலான விளம்பரங்களை செய்யவும் தடை விதிக்கும் வகையிலான சட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. வர்த்தக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளல், வாகனம் செலுத்துதல் ஆகியன உத்தேச புதிய சட்டத்தில் தடை செய்யப்படவுள்ளது. புதிய சட்டத்தின் அடிப்படையில் சமூக சேவைகளில் ஈடுபடுதல், சமய மற்றும் கல்வி நடவடிக்கைகளில்…

Read More

துமிந்த சில்வாவுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை எதிர்த்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

Read More

தட்டிக் கேட்க தயங்கமாட்டோம் – அமைச்சர் றிஷாத்

நமது நாட்டில் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த கதை போன்று தற்போது கொண்டுவரப்படும் புதிய யாப்பும் இருக்கக் கூடாது என்றும், சிறுபான்மை மக்களின் நலன்களை பேணும் வகையில் உத்தேச யாப்பு அமைவதன் மூலமே நமது வெற்றி தங்கியுள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தேர்தல் திருத்தச் சட்டத்திலும், அரசியல் யாப்பு திருத்தத்திலும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எமது கட்சி அதனைத் தட்டிக்…

Read More

கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்- கர்தினால்

கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித்  தெரிவித்துள்ளார். கொழும்பு பிசோப் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல்…

Read More

பாண் விலை அதிகரிப்பு

அனைத்து பேக்கரி உற்பத்தி விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு இறாத்தல் பாணின் விலையும் பனிஸ் ஒன்றின் விலையும்  5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்  கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More