Headlines

காலி கடற்பரப்பில், ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரட்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் இருந்து சுமார் 810 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கப்பல் காலி துறைமுகத்தில் தரிக்கச்செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கப்பலில் தலைவரிடம் இருந்து இதுவரை முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் யுக்ரெய்னுக்கு சொந்தமானது என்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபோதும் அதன் கெப்டன் இலங்கையர் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

அஹமட் முஷர்ரப் பெற்று சாதனை!

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று (07) புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் மற்றும் ஆங்கில ஆசிரியை திருமதி சல்மா ஜவாஹிர் ஆகியோரின் புதல்வருமாவார்.

Read More

மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது. சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும்…

Read More

தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத்  பதியுதீன் இந்த நியமனக்கடிதங் களை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார்…

Read More

இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது -வாசுதேவ

நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிப்பார்கள் என நேற்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவில் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 1 வீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு…

Read More

மாணவன் எச்.எஸ்; முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தி

– பி.எம்.எம்.ஏ.காதர் – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறு பேறுகளில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் ஹூமைதுஸ் ஸமீர் முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் மருதமுனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற துறைமுக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹூமைதுஸ் ஸமீர்,ஆசிரியை எம்.எம்.ஹிஸ்வத்துல் அறபா தம்பதியின் புதல்வராவார்.மாணவன் முகம்மது முறைஸ்; பெரிய நீலாவணை ‘அல்-மஹதுல் இஸ்லாமி’அல்குர்ஆன் மனனக்கற்கை நிலையத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இச்சிறுவனுக்கு உதவுங்கள்

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி ரூ பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் நாவிதன்வெளிக்கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள பிரதீபன் டிலுக்ஸன் எனும் 4 வயது சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உள்ள நிலையில் இச் சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக தலா 5 லச்சம் ரூபாய் தேவைபட்டது. இப்பணத்தொகையை இவ் வறிய குடும்பத்தினரால் ஈட்டிக்கொள்ள முடியாத தருணத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…

Read More

மத்தியமுகாம் அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் மூன்று மாணவர்கள் சித்தி

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி கோட்டக் கல்வி பிரதேசத்தில் மத்தியமுகாம், 12 ஆம் கொளனி சது/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் நேற்று காலை வெளியான 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீச்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஏ.எச்.எப்.றிஸ்தா பெற்ற புள்ளி-165, எம்.ஜெ.ஹூனைப் முஹம்மட் பெற்ற புள்ளி-159, ஜெ.எப்.யாஸ்மின் பெற்ற புள்ளி-155 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப், கற்பித்த ஆசிரியர் எம்.எம்.அமிறூல் ஹக் ஆகியோர்களும், மாணவர்களும் பிரதேச அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.

Read More

ஒரேநாளில் 97 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்!

சவூதி , தலை நகர் ரியாத்திலுள்ள நகரங்களில் ஒன்று அல்பதீயா, இங்கு செயற்பட்டு வரும் இஸ்லாமிய அழைப்பு மையம் ஒன்று; முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வதற்காக நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் பல நிகழ்ட்சிகளை பல மொழிகளில் நடத்தி வருகிறது. இந்த முயற்ச்சிகள் பல சந்தர்ப்பங்களில் அபார வெற்றியையும் தந்து வருகிறது, அண்மையில் அந்த அழைப்பு மையத்தின் முயற்ச்சியினால், ஒரு நாளில் 97 மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். இதனை share செய்வோம்

Read More

கண்ணீர் புகை குண்டுகளுக்கு கலங்காமல் அல் அக்ஸா பள்ளியினுள் குர்ஆன் ஓதும் நபர்!

சில தினங்களுக்கு முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஸா பள்ளியினுள்ளேயே இஸ்ரேலிய காவலர்களை மக்களை பள்ளியை விட்டும் விரட்டுவதர்க்காக கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்தனர். இஸ்ரேலின் கண்ணீர்புகை கண்டுகளுக்கு கலங்காமல் அல்அக்ஸா பள்ளியுனுள் திருமறை குர்ஆனை ஒரு பாலஸ்தீன முஸ்லிம் ஓதி கொண்டிருப்பதை தான் படம் விளக்குகிறது.

Read More

WHATSAPP பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

எனக்கு நேற்று கீழுள்ள படத்தில் காட்டியவாரு Messege வந்தது.. “நீங்கள் வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். உங்களுக்கான பரிசும் கிடைக்கப் பெறும்.”என்பதைப்போன்ற தகவல் எனது WhatsApp இற்கு வந்தது.. அதுவும் GROUP ஒன்று CREATE செய்து தொடர்பு கொண்டார்கள்.. அதில் நான் சொன்னது போன்று சொல்லிவிட்டு எங்களது பரிசைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதைக் கிளிக் (click)Click பன்னவும் என்று messege வரும்.அதன்பிறகு என்னை group இலிருந்து REMOVE செய்து விட்டார்கள்.. (அதன்மூலம் வரும் விபரீதம்..) ●அந்த msg மூலம் google location…

Read More

தேர்தலின்போது இணைய முறிவேற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளன!

மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கையில் இணைய முறிவொன்றினை யேற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக இஸ்ரேலில் இருந்து கணனிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை கண்டி பிரதேசத்தில் வீடொன்றில் இணைக்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியிருந்தது. குறித்த கணினி இயந்திரங்களை செயற்படுத்துவதற்காக இஸ்ரேலில் பயிற்சி பெற்ற நபர்கள் இருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்கள் புலனாய்வு பிரிவு உறுப்பினர்களா அல்லது வேறு நபர்களா என்பது தொடர்பில் இதுவரையில்…

Read More