Headlines

சிறுமி சேயாவை ஜன்னல் வழியாகவே கடத்தினேன் : கொண்டையாவின் சகோதரன்

“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்­போது அங்கு அனை­வரும் உறங்கிக் கொண்­டி­ருந்­தனர். நான் சிறு­மியை தூக்கிக்கொண்டு ஒரு­வாறு அதே ஜன்­ன­லி­னா­லேயே வெளியே வந்தேன். நானே சேயாவின் கொடூர கொலைக்கு பொறுப்பு..” கொட்­ட­தெ­னி­யாவ – கடல்­கம, அக்­க­ரங்­கஹ பிர­தே­சத்தின் சிறுமி சேயா செதவ்மி படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட பிர­தான சந்­தேக நப­ரான கொண்­டயா எனப்­படும் துனேஷ் பிரிய சாந்­தவின் மூத்த சகோ­தரன் சமன் ஜயலத் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தின் ஒரு…

Read More

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk. மேற்படி இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 158 -ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி 156 –அநுராதபுரம், பொலன்னறுவை 155 –பதுளை, மொனராகலை, அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம் 153 –வவுனியா, திருகோணமலை, நுவரெலியா –

Read More

அரசியல் தீர்வே புதிய அரசின் முதல் இலக்கு : ஜப்பான் நாடாளுமன்றில் ரணில்

இலங்கையின் தற்போதைய அரசு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு ஜப்பான் அரசு உதவிக்கரம் நீட்டும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நாடாளுமன்றில் தெரிவித்தார். இலங்கையில் தேசிய ஒற்றுமை, மத, இன ரீதியாக உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே புதிய அரசின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்  மேலும்…

Read More

போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் -அமைச்சர் றிஷாத் சந்திப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கை்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் இதன் போது பிரதி வெளியுறவு அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக தென் இந்தியாவில் போலாந்து முதலீடுகள் தொடர்பில் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் இலங்கையில்…

Read More

மக்காவில் காணாமல்போன இலங்கையரின் ஜனாஸா கண்டுபிடிப்பு

– இக்பால் அலி – புனித ஹஜ் யாத்திரைக்காகச் சென்று காணாமற் போனதாகப் பேசப்படும் தம்பதிகளில் கணவருடைய ஜனாஸா இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த அபூபக்கர் அப்துல் அஸீஸ் மற்றும் அவரது மனைவி ரொசான் ஹாரா அப்துல் அஸீஸ் ஆகிய இருவரும் அங்கு காணமாற் போனதாக பேசப்பட்டு வந்தது. இவர்களை தேடும் நடவடிக்கையில் ஹஜ் குழு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின்…

Read More

புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் தாயாா் வபாத்

– அஸ்ரப் ஏ சமத் – புரவலா் ஹாசீம் உமா் அவா்களின் அன்புத் தாயாா் ஜனாபா ஹவ்வா பாய் ஓமா் நேற்று இரவு வபாத்தானார். மர்ஹூம்களான ஜவ்பர் உமர், அலி உமர், ஹாஜி சித்தீக் உமர், மர்ஹூமா கலீமா பாய், அமீனா பாய் சுரியா ஆகியோரின் தாயாரும் ஹாஜி சுலைமான், உமர் சுரியா, இர்ஷாட் முஹமட், தன்வீர் சித்தீக் ஆகியோரின் பாட்டியும் ஆவார் இவரின் ஜனாஸா தற்போது இலக்கம் 94, ஸ்டேஸ் றோட், கிரேண்பாஸ், கொழும்பு-14 எனும் இலக்கத்தில்…

Read More

‘ஆண்மை நீக்கம்’ செய்யுங்கள் -வாசுதேவ நாணயக்கார

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவளிக்க முடியாதெனத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு ‘ஆண்மை நீக்கம்’ செய்யுமாறு ஆலோசனையொன்றையும் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆலோசனை முன்வைத்தார் வாசுதேவ நாணயக்கார.

Read More

பலாங்கொட நகர சபைக்கு சர்வதேச விருது

ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தில் ஆசிய பசுபிக் நகர நிர்மாண திட்டம் 2015 போட்டியில் ஜூரியின் விஷேட விருது பலாங்கொட நகர சபைக்கு கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஜூரிஸ் விஷேட விருதுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது. குறித்த விருது யூ.என். ஹெபிடாட் அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடியிருப்பு சங்க நன்கொடை நிதியினைப் பயன்படுத்தி பலாங்கொட நகரத்தின்…

Read More

இன்டிபென்டன் ஆர்கேட் கட்டடத்தில் உள்ள மீன்களைப் பராமரிக்க 300 இலட்சம் ரூபா தேவை

சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையிலுள்ள இன்டி பென்டன் ஆர்கேட் கட்டடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் தொட்டியில் உள்ள மீன்களை பராம ரிப்பதற்கு வருடாந்தம் 300 இலட்சம் ரூபா தேவைப் படுகின்றது. ஒரு மீன் 65 ஆயிரம் ரூபா பெறுமதியானது. குறித்த மீன்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இவ்வாறான நகர அபிவிருத்திகளையே முன்னைய அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் எமது அர சாங்கத்தில் மேல் மாகாணத்தை பாரிய நகரமாக…

Read More

உலக வங்கி, நாணய நிதி­யத்தின் கூட்­டத்தில் பங்­கேற்கும் அமைச்சர் ரவி

உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் வரு­டாந்த கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பெரு நாட்­டுக்­கு விஜயம் செய்­துள்ளார். இம்­மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திக­தி­வரை நடை­பெறும் இம்­மா­நாட்டில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் திறை­சே­ரியின் செய­லாளர் கலா­நிதி ஆர்.எச்.எஸ். சம­ர­துங்க, மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஆகி­யோரும் இலங்­கையின் சார்பில் பங்­கேற்­கின்­றனர். உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் இந்த மாநா­டு­களின் 188…

Read More

யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மகிந்த தரப்பு செய்தது

தமிழ் மக்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை அன்றே மஹிந்த ராஜபக் ஷ வழங்­கி­யி­ருந்தால் இன்று எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் வந்­தி­ருக்­காது. அன்று மஹிந்த செய்த தவ­றுக்கு இன்று அனை­வரும் விளைவை அனு­ப­விக்­க­வேண்­டி­யுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். வடக்கில் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாக தீர்க்க வேண்டும். இனியும் காலம் கடத்­து­வது பிரச்­சி­னை­களை வளர்க்கும் செயற்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கையில் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் எனவும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு ­காண வேண்டும் எனவும் பிரித்­தா­னியா…

Read More

மொபைல் தொலைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள்

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் செல்லிடப்பேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் செல்லிடப்பேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், செல்லிடப்பேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது. செல்லிடப் பேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை படுகொலை…

Read More