(வீடியோ இணைப்பு) பாலியல் லஞ்சம் கேட்ட அதிபரை போட்டுத் தாக்கிய தாயார்
(வீடியோ இணைப்பு) பாலியல் லஞ்சம் கேட்ட அதிபரை போட்டுத் தாக்கிய தாயார்
(வீடியோ இணைப்பு) பாலியல் லஞ்சம் கேட்ட அதிபரை போட்டுத் தாக்கிய தாயார்
கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பெளத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது. என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான…
முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி…
உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை…
இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்ப்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பல்பிட ஆகியோருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தத் தவறியது ஏன் என்பது குறித்து தம்மிடம் விளக்கமளிக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல்துறை நிதி மோசடிப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது 600 மில்லியன் ரூபா…
– பி.எம்.எம்.ஏ.காதர் – கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்.. இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் கல்முனை கல்வி வலயம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் இம்முறை அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி(தேசிய பாடசாலை)மாணவன் மதுரா கிருஸ்ண சைதன்னியன் 189 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தையும்,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் எம்ஆர்.முகம்மட் மரீஸ் 186 புள்ளிகளைப் பெற்று 2ம்…
– பாறுக் சிகான் – புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் சேட்டை செய்த ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(8) மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது. வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் ஆட்டோ சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் ஆட்டோ சாரதியை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்க வில்லை. பின்னர்…
– அபு அலா – அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு கடந்த வாரமாக மிக அதிகளவிலான பாரை மீன்கள் சிக்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள றஹ்மான் ராஜா கரைவலை மீனச்சங்க மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே நேற்று வியாழக்கிழமை சுமார் 2500 பாரை மீன்கள் சிக்கியதாகவும், சுமார் இந்த மீன்கள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இந்த மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன்…
– K.C.M.அஸ்ஹர் – புலமைப்பரிசில் பரீட்சையில் ஹஸ்னா ஹைதர் 171 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப்பெற்றுள்ளார். (முசலியூர்.கே.சி.எம். தரம் 5 புலமைப்பரிசில்; பரீட்சையில் ஹைதர் பாத்திமா ஹஸ்னா, என்பவர் 171 புள்ளிகளைப்பெற்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் ம.வி.இல் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்;.இவரின் வெற்றிக்காகப் பாடுபட்டுழைத்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள்,விசேடமாக தரம் 5 இல் கற்பித்த ஆசிரியருக்கும் இவர் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். இவர் முசலியைச் சேர்ந்த குலாம்காதர் ஹைதர் .சலீம் றபீன்சியா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார். இவரின் தந்தை புலமைப்பரிசில் மாணவர்கட்கு கற்பிக்கும்…
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் பசியால் வாட்டி காயமும்…
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23), உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, பிரிட்டிஷ் மூவிடோன் என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய ஆவணமாக கருதப்படுகிறது.