Headlines

எனது தந்தை பிரதமராவதை தடுக்கமுடியாது – நாமல்

நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More

தோல்வியடையும் முஸ்லிம் தலைவர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் -சேகு இஸ்ஸதீன்

அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறத்தவறும் கட்சி எதுவாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் தமது தலைவர் பதவியை கௌரவமான முறையில், காலம் தாழ்த்தாது இராஜினாமாச் செய்துவிட்டு, பொது முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக உழைக்கும் ஒரு தொண்டனாக, விருப்பத்துடன் செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கூறினார். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பாக அக்கரைப்பற்றில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – ஆகஸ்ட் 17 ஆம் திகதி…

Read More

அ.இ.ம.கா. இளைஞர் அணி ஒன்று கூடல்

– எம்.வை.அமீர் –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் எதிர்வரும் 13.08.2015 பிற்பகல் 2.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரசன்னத்துடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து இளைஞர் அணி உறுப்பினர்களையும் இவ் அணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்;ள இளைஞர்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களை 0771896767 ஃ0754366738 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்….

Read More

“எனது வாழ்க்கையில் நடந்த, மிக மோசமான நிகழ்வு”

உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார். இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். ” உலகக் கோப்பையுடன் …

Read More

வைத்திய மாணவர் 11 பேருக்கு நோட்டீஸ்

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை  ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையிலும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் வைத்திய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயே நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஒன்றுதிரட்டி மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் நீதிமன்றத்துக்கு…

Read More

இரண்டு மாணவர்களது பெறுபேறு ரத்து

பரீட்சை மண்டபத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற இரண்டு மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை கண்காணிப்புகளுக்காக 24 மணித்தியாலமும் அதிகாரிகள் குழு சகல பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுவினரே இந்த கையடக்க தொலைபேசி விடயத்தை கண்டு பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

13 வருட கல்வி அவசியமாக்கப்படவுள்ளது – பிரதமர்

தமது ஆட்சிகாலத்தில் 13 வருட கல்வியை அவசியப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்துக்குள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்கள் இருக்குமாக இருந்தால் அதற்காக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களை பொறுத்தவரையில் அவர்கள் கல்வி கற்பித்தல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் மாணவர்களுக்கு முழு கல்வியையும் போதிக்கும் செயலை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் சங்கத்தினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். தேர்தல் செயலகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் இலங்கை வந்துள்ளனர். தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் 30 அதிகாரிகள் நாடளாவிய ரீதியாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இந்தநிலையில். ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தின் பணிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி

வருகின்ற 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார். வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின்  அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Read More

தேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை

இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல் வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச ஆகியோருக்கு பாரிய நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்திருந்த விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு நேற்று  அறிவித்தது. எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமும் மேற்படி பொலிஸ் பிரிவு விசாரணை நடத்தக்கூடாது…

Read More

சீன நாணயத்தின் மதிப்புக் குறைப்பு

சீனா தனது நாணயமான யுவானின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பை 2 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளது.கடந்த மூன்று வருடங்களில் யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு கீழே சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இம்மாதிரியான திருத்தம், தொடர்ச்சியாக செய்யப்படாது என்றும் ஒரு முறை மாத்திரமே செய்யப்படும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், சீனாவின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், சீன மத்திய வங்கியின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியை மேம்படுத்த உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சீன…

Read More

தாஜுடீன் கொலை தொடர்பாக யசாரா அபேநாயக்கவிடம் விசாரணை

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வீதி விபத்து ஒன்றில் மரணமானதாக கூறப்பட்ட வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கொலை, தாஜுடீன் மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காதல் முரண்பாடுகளினால் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் மோதலுக்கு காரணமான, யசாரா அபேநாயக்க என்ற அந்தப் பெண், முன்னர் ராஜபக்சவினரால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றியவர்….

Read More