Headlines

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்




தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் சங்கத்தினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.

தேர்தல் செயலகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் 30 அதிகாரிகள் நாடளாவிய ரீதியாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தநிலையில். ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தின் பணிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *