Headlines

சவூதியில் 9 மாதங்களில் 5.5 இலட்சம் பேர் நாடு கடத்தல்

சவுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 32500 பேர் மீது பல்வேறுபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இவர்கள் சட்டத்திற்கு புறம்பான சவுதியில் நுழைய உதவியவர்கள், sponsor ஐ விட்டு வெளியே வந்து வேலை பார்த்தவர்கள் ,visa காலாவதி அகியும் நாட்டுக்கு செல்லாமல் மற்றும் visa புதிப்பித்தல் செய்யாதது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவர்கள். இதை தவிர 280 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இது வரை 30 லச்சம் திறஹம் பிழை வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்கள்…

Read More

சபாநாயகராக கரு ஜெயசூரிய?

எட்டாவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான கருஜயசூரியா சபாநாயகராகத் தெரிவு செய்யப்படலாம் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரியா சபாநாயகராக தெரிவாகலாம். இதேபோல் பிரதிசபாநாயகராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.

Read More

சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது : மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவி குறித்து சமலிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லையெனவும், அது பொய்யான தகவலென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…

Read More

இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் – அமெரிக்க எழுத்தாளர்

இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக மேற்குலகம் மற்றும் சில அறிவு ஜீவிகளும் கூவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவு ஜீவியும் பிரபல எழுத்தாளருமான சூயி அவர்கள் இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் என்றும் இஸ்லாமிய மார்கத்தில் ஆண்கள் தான் அப்பாவிகள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் எண்ணுவது போல் இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக முதலில் தாம் எண்ணியதாக கூறும் சூயி சில மாதங்கள் சவுதி அரேபியாவில் வாழும் வாய்ப்பு கிடைத்த போது தான் தனது…

Read More

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர்!

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது ? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள்…

Read More

கடுமையான இடி மழைக்கு இடையேயும் கஃபாவை மக்கள் வலம் வரும் அழகிய காட்சி !

மழை இறைவனின் மிக பெரிய அருள்களில் ஒன்றாகும். இந்த மழையின் மூலமே பூமி உயிரோட்டம் நிறைந்ததாக நீடிக்கிறது. இந்த மழையின் மூலமே பூமி பசுமை நிறைந்ததாக மாறுகிறது . இந்த மழையின் மூலமே பூமியின் நிலத்தடி நீர் வளம் வழர்கிறது. இறைவன் எங்கு எப்போது மழையை இறக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ அங்கே அவன் விரும்பும் நேரத்தில் மழையை இறக்குகிறான் . கடந்து சென்ற மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை மக்கா மாநகரை அலங்கரித்தது. இடியுடன் கூடிய மழைக்கிடையேயும் இறைஇல்லத்தை வலம்…

Read More

வினாப் பத்திரங்களை திருத்தும் பணிகள் செப்டம்பர் 09 – 14 வரை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 38 பாடசாலைகளில் இப்பணி இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள 2907 நிலையங்களில் நடைபெற்ற தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரத்தி 926 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப்பத்திரங்களை…

Read More

தொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்!

கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை. சவுதி அரேபியன் ஏர் லைன்ஸின் விமானியின்…

Read More

24 மணி நேரத்தில் விபத்­துக்­களில் ஏழு பேர் உயி­ரி­ழப்பு; 26 பேருக்கு காயம்

நாட­ளா­விய ரீதியில் நேற்று நண்­பகல் 12.00 மணி­யுடன் நிறை­வுக்கு வந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களில் 7 பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். தம்­புள்ளை, நாரம்­மல, பன்­னல, ஹுங்­கம, கிரி­உல்ல மற்றும் புளத் சிங்­கள ஆகிய பகு­தி­க­ளி­லேயே இந்த விபத்துச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரிவித்துள்ளது. நேற்று அதி­காலை தம்­புள்ளை பொலிஸ் பிரிவின், தம்­புள்ளை – கெக்­கி­ராவை பிர­தான வீதியின் மிரிஸ்­கோ­ணி­யாவ சந்­தியில் தனியார் பஸ் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் அதில்…

Read More

அமெரிக்காவின் சதித்திட்டமே உள்ளக விசாரணையாகும்

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் எந்­த­வொரு விசா­ர­ணையும் தேவை­யில்லை. தற்­போ­தைய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள உள்­ளக போர்க்­குற்ற விசா­ர­ணை­யா­னது அமெ­ரிக்­காவின் சதித்­திட்­ட­மாகும். இது நாட்­டுக்கு ஆபத்­தா­னது என சிரேஷ்ட ராஜ­தந்­தி­ரி­யான தயான் ஜய­தி­லக்க தெரிவித்­துள்ளார். அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். மற்­ற­படி போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இதற்­கான பரி­கா­ர­மாக அமை­யாது என­வும் ­கு­றிப்­பிட்­டுள்ளார். ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்வி ஒன்­றி­லேயே தயான் ஜய­தி­லக்க மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.குறித்த செவ்­வியில் அவர்­தொ­டர்ந்து கூறியுள்ளதாவது,உலகின் எந்­த­வொரு நாடும்…

Read More

மஹிந்த நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதி: எஸ்.பி

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய  திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். “இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய…

Read More

8ஆவது பாராளுமன்றம் நாளை! புதிய எம்.பிக்கள் விரும்பிய ஆசனங்களில் அமர ஏற்பாடு

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார். நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கையின் 08வது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வு ஆரம்பமாகும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுபாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அன்றையதினம் காலை கூடி சபாநாயகரை தெரிவு…

Read More