Headlines

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி




வருகின்ற 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார்.
வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின்  அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *