Headlines

அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப…

Read More

கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் அமீர் அலிக்கு ஆதரவு 

– அனா – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரிப்பது என கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் தீர்மாணித்துள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் எச்.எம்.எம்.அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. எமது அமைப்பின் விஷேட நிருவாக சபைக்கூட்டம் (25.07.2015) சனிக்கிழமை இடம் பெற்றது இதில் கடந்த…

Read More

கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார் அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார். நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள். உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை…

Read More

ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை : பொதுபல சேனா

பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட யாரும் ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை என அவ் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திர் அமைச்சர் கே.கே.டீ.எஸ். குணவர்தனவினால் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களை தாக்கியதாக கூறிய கருத்திற்கு திலந்த விதானகே கண்டனம் வெளியிட்டதோடு, பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்துள்ளார். நாட்டின் அமைச்சர் என்ற ரீதியில் போலியான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் இனத்தின்…

Read More

இலங்கையில் ISIS  ஆபத்தில்லை – மூக்குடைந்த ஞானசார

ஐ.எஸ்.ஐ.எஸ்.களினால் இலங்கையில் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இலங்கையில் குறித்த தீவிரவாத இயக்கம் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். தமது உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான ஐ.எஸ்.ஐ.எஸ். வாதி தம்மை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த இயக்கம் இலங்கையில் செயற்பட்டு வருவதற்கான எவ்வித ஆதரங்களும் கிடையாது எனவும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும்…

Read More

அப்துல் கலாம் காலமானார்

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு…

Read More

உலக முஸ்லிம்கள் ஒன்று பட்டு எழ வேண்டும் – பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம்

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலத்தை மீட்டு எடுக்க முஸ்லிம் உலகம் ஒன்று பட்டு எழ வேண்டும் பலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம் வேண்டு கோள்! இன்று பைத்துல் முகத்தஸில் தொழுகைக்காக சென்ற பலஸ்தீன முஸ்லிம்களுக்கும் இஸ்ரேல் பொலிஸ்  துறைக்கும் இடையே மாபெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில்  ஸ்ரேலின் பொலிசார்  இறை இல்லத்திற்கு உள்ளேயே கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து புனித தலத்தின் புனிதத்தை சீர் குலைக்க முனைந்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் பொலிசார்களை எதிர் கொண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள் பலர் காயமடைந்தனர்இந்த…

Read More

சிரிப்பு வரவழைக்கும் GASஐ சுவாசித்த வாலிபர் பலி

இங்கிலாந்தில் லாப்பிங் GAS (சிரிப்பை வரழைக்கும் GAS எனப்படும்) நைட்ரஸ் ஆசிட் மோகம் அதிகமாக உள்ளது. டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை இதை சுவாசித்து மிக மகிழ்ச்சியாகவும், பேரானந்தமாகவும் இருக்க விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது. நைட்ரஸ் ஆசிட் உடலில் இருக்கும் ஆக்சிஜனை செயல் இழக்க செய்து உயிரை இழக்க செய்கிறது. அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. லண்டனை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் நண்பரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார்,….

Read More

மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும்

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களால் முறையற்ற வளர்சிதை மாற்றங்கள் மட்டுமின்றி நரம்பியல் நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும்…

Read More

செல்பி எடுத்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்கள் சிலருடன் செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கால்டன் இல்லத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே மேற்படி இளைஞர்களின் வற்புறுத்தலின் பேரில் செல்பி எடுத்து கொண்டதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு மஹிந்­தவே வித்­திட்டார் : விஜேதாஸ ராஜபக்ஷ

ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே வித்­திட்டார். அதனை எதிர் கொள்­வது ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு ஒரு­வி­ட­ய­மே­யல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தற்­போது சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம்கொடுக்க அஞ்­சு­கின்ற போதும் கடந்த காலங்­களில் அவரே…

Read More

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் பலியாகினர். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 82 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றும் முயற்சியில் கடந்த…

Read More