Headlines

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியிலும் கடையடைப்பு

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கமை, 27ஆம் திகதி முதல் கண்டி நகரத்திலுள்ள சகல கடைகளிலும் கறுப்பு நிற கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளனர். அத்துடன், 29ஆம் திகதி சகல கடைகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

ரூ.33 ஆயிரத்துக்கு குறைவு என்றால் பிரச்சினையில்லை

தினசரி பணப்புரள்வு 33 ஆயிரத்துக்கு குறைவாக அல்லது மாதாந்த பணப்புரள்வு 1 மில்லியனுக்கு குறைவான வியாபாரிகள், வெட் தொடர்பில் பதிவுசெய்ய அவசியம் இல்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

சுகாதார சேவைகளுக்கு வற் வரி விதிப்புக்கள் இல்லை!

மருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு இதற்குப் பதிலாக புகையிலை நிறுவனங்களிடம் வரியை 90 வீதம் அறிவிட தீர்மானித்துள்ளோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மருத்துவ சேவைக்கான வற்…

Read More

VAT வரி மீதான 5 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

VAT வரி வீதம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுகள் 5ஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது. tm

Read More

சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது. 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.

Read More

வரிச் சுமை: நிரந்தரம் அல்ல

-வி. நிரோஷினி – ‘நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிச் சுமையானது தற்காலிகமானதே தவிர, நிரந்தரமானதில்லை. எனவே, தற்போதுள்ள வரி அதிகரிப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக்குழுவுடன் கலந்துரையாடி, GSP+ வரிச் சலுகையில் நல்லதொரு முடிவை எடுப்போம்’ எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More

சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்தின் விலையானது 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று (1) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை வழங்கியுள்ளது. இதற்கமைய 870 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து ஒரு மூட்டையின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 வகையான சீமெந்து நிறுவனங்களின் சீமெந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள்

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும்…

Read More

ටුක්  ටුක් මිල ඉහලට

–    නිලුපුලී – නව බදු සංශෝධන හේතුවෙන් ත්‍රී රෝද රථ සහ අමතර කොටස් වල  මිල ගණන් ඉහල යාම නිසා  ත‍්‍රීරෝද රථ ගාස්තු ඉහල දැමීමට සිදු වනු ඇතැයි සමස්ත ලංකා ත‍්‍රීරෝද රථ රියදුරන්ගේ සහ හිමිකරුවන්ගේ සංගමය පවසන අතර අද දින ( මැයි  30 ) ත්‍රී රෝද රථ ආනයනික සමාගම් සමග නව බදු සංශෝධන පිලිබඳ සාකච්ඡා කර…

Read More

ஜப்பான் வாகனங்களின் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி

அரச நிறுவனங்களின் வரி அதிகளவில் உயர்வடைந்துள்ளதனால் இனிவரும் காலங்களில் ஜப்பான் வாகனங்களை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்படுமென வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை இனிவரும் காலங்களில் குறைந்த தீர்வைகொண்ட இந்திய வாகனங்கள் எம் நாட்டுச் சந்தைகளில் அதிகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிப்பு

இன்று முதல் அலகு ஒன்றுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால்,   1,500 சீசீக்கு மேற்பட்ட மோட்டர்  வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் மஹிந்த சமரசந்திர தெரிவித்தார்.

Read More

வட் வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி காரணமாக பொதுமக்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக குறித்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் 149 முன்னணி சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிவில் சமூக அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரமளவில்…

Read More