Headlines

தொலைபேசி கட்டணங்களில் வற் வரி சேர்க்கப்படாது!

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்….

Read More

வட் வரிக்கு எதிர்ப்பு – கொழும்பில் ஆர்பாட்டம்

வட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாட்ர் வெயார் ஊரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு, குவாரி பாதைக்கு அருகாமையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. மேலும், ஹார்ட் வெயார் ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை தொடரவுள்ளர். இதன்காரணமாக வியாபாரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

வற் வரி தொடர்பில் 20 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள்

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார்கள். இதன்போது அவ் வரியில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்  என்று அரசாங்கம் தெரிவித்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அறவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு…

Read More

இன்று முதல் 11% வற் அறவிடப்படும்

‘வற்’ (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்புக்கான தீர்மானத்தைக் கைவிடுமாறு, இடைக்காலத் தடையுத்தரவை உயர்நீதிமன்றம், நேற்றுப் (12 பிறப்பித்தது. மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், வரி அதிகரிப்பைக் கைவிடவேண்டும் என்றும், அவ்வாறு மேற்படி இரண்டு வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் கட்டளையிட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட இவ்விரு வரி அறவீடுகளும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதாக, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, 11 சதவீதமான வற் அறவிடப்படும்…

Read More

வற் வரிக்கு இடைக்கால தடை

பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதி

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை பிரதியமைச்சர் நிமல் லன்சா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தான் 85 இலட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வி8 வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக நிமல் தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய சொந்த பணத்தில் டொயோட்டா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தலதா அத்துகோரள  தெரிவித்தார். இவை,…

Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்

சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி

ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று (8) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வட் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களுக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமைச்சர் உள்ளிட்டவர்கள் தயாராக இருக்க…

Read More

வற் வரி தொடர்பில் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நியமனம்!

வற் வரி தொடர்பில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேலும் 1100 அரச அதிகாரிகள் வேலைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என  அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் சில பிரதேசங்களில் அநீதியான முறையில் விலை  அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றினை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் எவற்றுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. அவ்வகையில் வற்  வரி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த…

Read More

வற்வரி பிரச்சினைக்கு தீர்வு!

வட் வரி சம்பந்தமான பிரச்சினை எதிர்வரும் 4ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வட் வரி சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் ஒன்று அன்றைய தினம் நிதியமைச்சில் இடம்பெறும் என்று அமைச்சர் கூறினார். கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம வாயிலின் நிர்மாணப் பணிகள் குறித்து ஆராய கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்

Read More

வற் வரி சீரமைக்கப்படும்

பொருளாதாரம் தொடர்பான வல்லுனர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (04) அளவில் வற் (VAT) வரியை சீரமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (29) கிராந்துருகோட்டை, மஹாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதுளை மாவட்ட சிறுநீரக நோயாளர்களுக்கு உதவியளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். அதேபோன்று, வரிச் சலுகை கொண்ட வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரத்தை (Permit) பெறத் தகுதியான சகல அரச ஊழியர்களுக்கும் புதிதாக வாகன கொள்வனவுப் பத்திரம் வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது…

Read More

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறித்த வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல நகரங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று கிரிபத்கொட, கடவத்த, மாகொள, களனி ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நகரங்களின் வர்த்தகர்கள் நடைபயணத்தை மேற்கொண்டு கிரிபத்கொட சந்தி வரை சென்று அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More