Headlines

ஜப்பான் வாகனங்களின் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி




அரச நிறுவனங்களின் வரி அதிகளவில் உயர்வடைந்துள்ளதனால் இனிவரும் காலங்களில் ஜப்பான் வாகனங்களை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்படுமென வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை இனிவரும் காலங்களில் குறைந்த தீர்வைகொண்ட இந்திய வாகனங்கள் எம் நாட்டுச் சந்தைகளில் அதிகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *