Headlines

பஸ் கட்டணமும் அதிகரிக்கும்?

வற்வரி அதிகரிப்பு காரணமாக, பேருந்து கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஆகக்குறைந்த கட்டணமான 8 ரூபாய் கட்டணம், 10 ரூபாயாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கும் பொருட்டே, இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

செல்லப்பிராணி நாய்களை பதிவு செய்யாவிட்டால் 10ஆயிரம் ரூபா தண்டம்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறின் 10ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது, கட்டாக்காலி நாய்களின்…

Read More

நாய்களுக்கும் வரி

வெள்­ளைக்­காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலை­தூக்­கி­யுள்­ளது. நாய்­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்­திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்த பொது எதிர்க்­கட்­சி­யினர். சிறு­நீ­ரக நோயா­ளர்­களின் இரத்தப் பரி­மாற்றம் செய்யும் கட்­ட­ணத்­திற்கும் புற்று நோயா­ளர்­களின் எக்ஸ்­ரேக்கும் 15 வீத வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் குற்­றம்­சாட்­டி­யது. பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பொது எதி­ர­ணி யின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்­டி­லேயே இக்கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. பொது எதி­ர­ணி­யினர் இங்கு மேலும் கருத்து வெளியி­டு­கையில்; இலங்­கை­யர்­க­ளிடம் அனைத்து…

Read More

பஸ் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானம்

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

”இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்”

இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து உணவு வகை­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அகில இலங்கை உண­வக உரி­மை­யா­ளர்­கள் சங்­கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­திய புதிய வரி கார­ண­மாக இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து வகை உணவு வகை­களின் விலை­களும் 10 ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

Read More

VAT வரி: கொத்து ரொட்டியின் விலை உயர்வு

கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் மற்றும் டெவல் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஹொட்டல் உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கொத்துரொட்டி, டெவல், ரைஸ் போன்றவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. சோஸ் வகைகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளின்…

Read More

மைத்திரி வீடு செல்ல வேண்டும் : உதய கம்மன்பில

எமது நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளின் ஆலோசணைகளின் பேரிலேயே வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை உடனடியாக பதவி நீக்க வேண்டும் இல்லாவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிச்செல்ல வேண்டும் என்று பாராளுமன்ற உருப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உருமயவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

Read More

15 வீத வற் வரி அதிகரிப்பு அமுல்

– எஸ்.வினோத் – அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி இன்று இரண்டாம் திகதி  திங்கட்கிழமை  முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.  அதன் பிரகாரம் இது வரைக்காலமும் அறவிடப்பட்டு வந்த  11 சதவீதமான பெறுமதி சேர் வரி   இன்று முதல் 15 சதவீதமாக நடைமுறைப்படுத்தப்படும்  என்று   நிதியமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதுவரை பெறுமதி சேர் வரிக்கு உள்ளடக்கப்படாத மின்சார  கட்டணத்திற்கு எதிர்வரும் காலத்திலும் இவ்வரி உள்ளடக்கப்பட…

Read More

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்

‘இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்ததாலும் இறக்குமதி வரியை குறைக்கும் சாத்;தியம் இல்லை என்பதால், வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும்’ என்று இலங்கை வாகன இறங்குமதிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர கூறினார். ‘வற்’ வரி தொடர்பிலான கலந்துரையாடலொன்று வாகன உரிமையாளர் சங்கத்திலுள்ள மூன்று நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதமர் மற்றம் நிதியமைச்சருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது. இதன்போது, வரியை குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இதனால் வாகனங்களின் விலைகள் 300,000 ரூபாயிலிருந்து 400,000 ரூபாய் வரைஅதிகரிக்கப்படும். முன்னர்…

Read More

வாகனங்களின் விலையில் ஏற்படும் பாரிய மாற்றங்கள்.!

வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரிய மாற்றங்கள் ஏற்படும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம் எனவும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதரா நிலைமையினால் வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர், மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

VAT நடைமுறைப்படுத்தப்படும் – நிதியமைச்சு

திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வீதமாக திருத்தம் செய்யப்பட்ட வற்வரியே எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More